டிப்ஸ்... டிப்ஸ்...
வீட்டில் இருக்கும் வெள்ளிப் பாத்திரம் மற்றும் நகைகளை எப்போதும் புதுசுபோல வைத்திருக்க வேண்டுமென்றால் கொதிக்கும் நீரில் ஒரு உள்ளங்கை அளவுக்கு அலுமினியம் ஃபாயில் பேப்பர் துண்டு ஒன்றைப் போட்டு, அதனுடன் வெள்ளிச் சாமான் களையும் மூழ்கும்படி போட்டு விடுங்கள். சிறிது நேரம் கழித்து நகையை எடுத்து அதே அலுமினியம் பேப்பரால் தேய்த்தால், பளிச்சென்று ஆகிவிடும் (மாத்திரை, டீத்தூள் போன்ற பொருட்கள் வைத்து வரும் அலுமினிய பேப்பர்களையும் உபயோகிக்கலாம்).
--------------------------------------------------------------------------------------------------
டீ போடும்போது, முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையை சேர்த்துக் கொதிக்க விடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடான பால் சேர்த்தால், டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு பாத்திரமும் கருக்காது.
-----------------------------------------------------------------------------------------------
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது கடைசியில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு விடுங்கள். நெய் நல்ல மணமாகவும் இருக்கும்.. கசக்கவும் செய்யாது.

பழசாகிப் போன தலையணை உறை, பெட்ஷீட், நைட்டி போன்ற திக்கான காட்டன் துணிகளை இரண்டு அங்குல அகலமுள்ள ரிப்பன் போல வரிசையாக வெட்டிக் கொள்ளுங்கள். மேல் பாகம் கடைசி வரை வெட்டி விடாமல், மேலிருந்து இரண்டு அங்குலம் விட்டு வெட்டுங்கள். கத்தரிக்காத மேல் பாகத்தை ஒரு குச்சியில் சுற்றி, டைட்டாகக் கட்டி விட்டால் தரை துடைக்கும் ‘மாப்’பாகவோ, ஜன்னல், கார் முதலியவற்றைத் துடைக்கும் டஸ்டராகவோ உபயோகிக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------
சாப்பிடும்போது பச்சை மிளகாய் அல்லது மிளகாய்ப் பொடி ஆகியவற்றை மென்றதால் காரத்தால் துடிக்கும் சமயத்தில் ஒன்றிரண்டு சொட்டு தேனை எடுத்து நாக்கு, உதடு முதலிய இடங்களில் தடவி விழுங்கி விடாமல் அப்படியே சில விநாடிகள் வைத்திருந்தால், காரம் உடனடியாக குறைந்துவிடும்.
--------------------------------------------------------------------------------------------
மளிகை சாமான்கள், அல்லது ரெடிமேட் ஆடைகள் வாங்கும்போது சுத்தமான வெள்ளைக் கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் கவர்கள் கிடைக்கும். அவற்றின் மேலே கோலம், வண்ணப் பூக்கள் போன்றவற்றை பெயின்ட் செய்து அவற்றை வெட்டி தாம்பாளத்தில் தண்ணீர் ஊற்றி மிதக்க விட்டால் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

0 comments:
Post a Comment