Ads Header

Pages


05 May 2012

மூலிகைகள் கீரைகள்! பொன்னாங்கண்ணிக் கீரை

சாதாரணமாக பொன்னாங்கண்ணி யின் காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும் எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக் கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. கால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.

'பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந் தால், பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்க லாம்' என்பார்கள். காரணம், இதில் வைட்டமின்ஏ இருப்பதால், அந்த அளவுக் குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும் வல்லமையைக் கொண்டது இது.

இதை வெவ்வேறு விதமாக உட்கொள் வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும். இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும். மாறாக, பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.

இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும். உடல் உஷ்ணம் குறையும். ரத்தம் விருத்தியாகும். இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு. இவ்வளவு மகத்துவங்கள் அடங்கிய இந்தக் கீரையை, 'கீரைகளின் ராஜா' என்று தயங்காமல் சொல்லலாம்!

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner