Ads Header

Pages


17 May 2012

பொன்மேனியாக்கும் பொன்னாங்காணிக்கீரை

ங்கச்சத்து உடலுக்குத் தேவையானது. இதன் சத்துக்கள் திரிதோஷத்தையும் நீக்கவல்லது. ஆயுளை நீடிக்கச் செய்யும். அறிவு விருத்தியாகும். நினைவாற்றல் பெருகும். வீரிய விருத்தி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை உண்டாக்கி, உடம்பில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் நீக்கவல்லது. தாது புஷ்டிக்குச் சிறந்தது. தோல் பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டு உடம்பினைப் பொன்மேனியாக்கும்.

தங்கத்தை பஸ்பமாக்கிப் பயன்படுத்தினால், மேற்கண்ட பொதுப்பலனைப் பெறலாம். சிறப்பாக, இருமல் நோய்க்கும், சயரோகத்திற்கும், உடல் பலவீனத்தை நீக்கவும், இரத்த விருத்திக்கும், புணர்ச்சி சக்தியை மேம்படுத்தவும் பயன்படுகிறது. சாமான்ய மக்கள் இதைப் பயன்படுத்த முடியாது.

அனைத்துத் தர மக்களும் பயன்படுத்தி தங்கத்தின் மருத்துவக் குணங்களைப் பெற தங்கச் சத்துள்ள மூலிகைகள், கீரைகள், மலர்கள் அனேகம் உள்ளன.

விலை மலிவானதும், எப்பொழுதும், எங்கும் கிடைக்கக்கூடியதும், விலை இல்லாதது மானவற்றைப் பயன்படுத்தி பல நன்மைகளைப் பெறலாம்.

பொன்னாங்காணிக்கீரை

தங்கச்சத்தைச் சிறப்பாகக் கொண்டது. பொன்+ஆம்+காண்+நீ=பொன்னாம்காணி என்ற காரணப் பெயர் கொண்டது.

பொன்னாங்காணிக்கீரையில் தங்கச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமாக இருப்பதாலும், சுண்ணாம்புச்சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாலும் இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. பொன்னாங்காணிக்கீரை சமைத்துச் சாப்பிடுவதால், உடல் பலம் கூடும். தோல் நோய்கள் வராது. கண் நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். பார்வை தெளிவடையும். நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களும் மூலநோய் உள்ளவர்களும் தொடர்ந்து சாப்பிட்டால், குணம் பெறலாம்.

பொன்னாங்காணிக்கீரையை உப்பு சேர்க்காமல் வேகவைத்து வெண்ணெய் சேர்த்துக் கடைந்து தினசரி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். காட்டராக்ட் நோய் வராமல் பாதுகாக்கும். கண் சம்பந்தமான இதரப் பிணிகள் அனைத்தும் நீங்கி பார்வை தெளிவடையும். தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும்.

பொன்னாங்காணிக்கீரையை துவரம் பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உடம்பு பெருக்கும். பொன்னாங்காணிக் கீரையில் துவரம் பருப்பு சேர்த்துச் சமைத்து நெய் சேர்க்காமல் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூன்று மாதங்களில் தேவையற்ற உடல் பருமன் குறையும்.

இக்கீரையில் பூண்டும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் மூல வியாதி முற்றிலும் குணமாகும். மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.

பொன்னாங்காணிச்சாறு 30 மில்லியளவு தயாரித்து, பசும்பாலில் கலக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பொன்னாங்காணிச்சாற்றைக் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

பொற்றிலைக்கரிப்பான்

பொற்றிலைக்கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச்சத்து அதிகம் உள்ளது. இக்கீரையைச் சாப்பிட்டால் உடல் பொன் நிறமாகும். உடலை எந்த நோயும் தாக்காது. கண்கள் ஒளி பெறும். பார்வை கூர்மை பெறும். புத்தி தெளிவடையும். குன்மக் கட்டிகள் நீங்கிவிடும். பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையை பச்சையாகத் தின்றால் மிகுந்த நன்மை கிடைக்கும். பச்சடியாகவும், கூட்டுக்கறியாகவும் தயாரித்துச் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூளைக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.

சித்தப்பிரமைக்கு மிக நல்ல மருந்து. கண்கள் சம்பந்தமான அனைத்து நோய்களும் நிவர்த்தியாகும். கபம் தொடர்பான சளி, இருமல் நீங்கும். ரத்த சோகை நோய் நிவர்த்தியாகி, நல்ல உடல் ஆரோக்கியம் ஏற்படும். பாண்டு நோய் நிவர்த்தியாகும். மஞ்சள்காமாலை நோயை முழுமையாக நீக்கிவிடும் மிக அற்புதமான மருந்தாகும். கல்லீரல், மண்ணீரல் நோய் வந்தால் இம்மூலிகை மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம். ரத்த விருத்திக்குச் சிறப்பான மூலிகையாகும்.

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்து, நிழலில் நன்றாகக் காய வைத்துப் பொடி செய்துகொண்டு பொடியின் எடைக்குப் பாதி எடை, சீனி சேர்த்துக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை ஆகாரத்துக்கு முன்னதாக ஒரு தேக்கரண்டி பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சோகை, காமாலை, பாண்டு, வீக்கம், மூலம், மேகரோகங்கள் நிவர்த்தியாகும்.

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரை இலையைச் சுத்தம் செய்து, நிழலில் சிறிது உலர்த்தி மெழுகுபதமாக அரைத்து சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்து, சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் போட்டு, மாத்திரை மூழ்கும் அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றி ஐந்து தினங்கள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துக்கொண்டு, சிறியோர் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு வந்தால், சோகை, காமாலை, பாண்டு வீக்கம், குன்மக்கட்டி, கண், சீதபேதி, அதிசாரம், மாந்தக்கழிச்சல் குணமாகும். ரத்தவிருத்தி ஏற்பட்டு, உடல் தங்கநிறம் அடையும்.

ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மூர்ச்சை, மயக்கம், நரம்பின் அதிர்ச்சிகள், தூக்கமின்மை, புலம்புதல் போன்ற நிலையில் காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு மாத்திரை வீதம் தினசரி சாப்பிட்டு வந்தால், ஹிஸ்டீரியாவின் தொடர்புடைய அனைத்து நோய்க்குறிகளும் குணமாகும்.

கரிசலாங்கண்ணி நெய்

பொற்றிலைக் கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு பங்கும், பசு நெய் ஒரு பங்கும் சேர்த்துக் காய்ச்சி வண்டல் மெழுகுபதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப கற்கண்டு சேர்த்து காலை ஆகாரத்துக்கு முன்பும், இரவு படுக்கும்போதும் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. மூலரோகம், கண் ரோகங்கள், உஷ்ண ரோகங்கள், இருமல் அனைத்தும் நிவர்த்தியாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner