Ads Header

Pages


21 May 2012

எக்சர்சைஸ் பண்ணுங்க. அழகா இருங்க.

நேரா நின்று கொள்ளுங்கள்.. அட சரியா நில்லுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா, நன்றாக வளைந்து காலைத் தொடுங்க. என்ன இடுப்பு வலி உயிர் போகுதா? என்ன வலி? 25 வரை எண்ணிக்கங்க. எண்ணிட்டிங்களா? இப்ப நிமிறுங்க. சிறிது ஓய்வுக்குப் பின் மறுபடி பழையபடி செய்யுங்க.. கொஞ்ச கஷ்டமாதான் இருக்கும். ஆனால், பலன் அதிகம்.

1. சைக்ளிங்




இது மாதிரி செஞ்சா அடி வயிறு தொப்பை குறையும். தொடைப்பகுதி வலுவாகும். குறைஞ்சது 20 முதல் 30 தடவை ஒரு செட்டுக்கு செய்யுங்க.















2. இடுப்புக்கு:

தரையில் படுத்துக்குங்க. படுத்தாச்சா? கரெக்டா ஒரு காலை 90 டிகிரி இருக்குற மாதிரி தூக்குங்க. பின்பு சீராக இறக்குங்க. இப்படி செய்றப்ப ஒரு கையைத் தலைக்கு பேலன்சுக்கு வச்சுக்குங்க.

இப்படி ஒரு கால் மாற்றி ஒரு கால் செய்றதால இடுப்பு பகுதியில இருக்கிற சதை கரைஞ்சி ஓடிடும்.

3. காலுக்கு.... தொடை:

நேரா படுத்துக்குங்க. தலைக்கு பேலன்ஸ் வச்சுக்குங்க. காலை மடக்கி மடக்கி செய்யுங்க. இதனால தொடை உறுதியாகும். ஆனா ஒரு தடவைக்குக் குறைஞ்சது 30 முறையாவது இப்படிச் செஞ்சாத்தான் பலனுண்டு.


4. கால் மாற்று:





கால் மாற்றி கால் பிடிச்சுக்குங்க. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். செய்யப் பழ கிட்டிங்கன்னா, பிறகு ஈஸியா இருக்கும். இதைச் செய்றதால நாளடைவில் கால் பகுதி வலுவாகும்.













5. அந்தரம்:

அந்தரத்தில் அட்டகாசமாக மேலே போங்க. மேலே போகப்போக உடம்பு நம் சொற்படி கேட்கும். உடம்பை வில்போல வளைக்கணும். இப்படி 5 முதல் 10 செகண்ட் செஞ்சு பாருங்க. இளமை இதோ இதோன்னு உங்கள் வசம் இளமை ஊஞ்சலாடும்.







அட்வைஸ்:

எக்சர்சைஸ் செய்றது பெரிய விஷயமே இல்லை. மனசுதான் தேவை. அதிலும் மனசு லேசா இருந்திட்டா எல்லாம் முடியும். மனசு லேசா இருந்தா முகத்துல புன்னகை நிரந்தரம். புன்னகை நிரந்தரமாக இருந்தா நிம்மதி நிச்சயம். இதெல்லாம் கைகூடணும்னா அன்பு அவசியம். அன்பு வேறெங்கேயும் இல்லை. நம்மகிட்டதான் இருக்கு. அன்பு இருந்தா அழகுதானா அடைக்கலமாகிவிடும். எக்சர்சைஸ் பண்ணுங்க. அழகா இருங்க.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner