Ads Header

Pages


16 May 2012

என்றும் இளமையுடன் இருக்க! ஹெல்த் டிப்ஸ்!

‘‘இத்தனை வயசுக்கு அப்புறமும் தோலில் கொஞ்சம்கூட சுருக்கமே இல்லாமல் ரம்யா கிருஷ்ணன் எப்படி இருக்காங்க பாரு’’ என்று ஆச்சர்யப்படுபவரா நீங்கள்?

அட... ஆச்சர்யத்தை விடுங்க, நீங்களும் அப்படி என்றும் இளமையுடன் இருக்க நாங்க வழி சொல்கிறோம்!

ஆயில் மசாஜ்

பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வர, சருமத்தில் சுருக்கமா... மூச்!

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பல சிக்கலில் கொண்டு போய் விடும். அதில் ஒரு சிக்கல் தோல் சுருக்கம்! ஸோ, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு, மலச்சிக்கலை ஓட ஓட விரட்டுங்கள்.

கருவேப்பிலைப் பொடி

கறிவேப்பிலையில் உள்ள விட்டமின் ‘ஏ’ இளமையான சருமத்தைக் காப்பாற்றி, அதைத் தொடர்ந்து நம்முடனேயே இருக்க வைக்கும் அற்புதமான நண்பன்!

வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையை, பாசிப்பருப்பு, சீரகத்துடன் வேகவைத்து, மசித்து சாப்பிட்டு வாருங்கள். வாரம் இரண்டு (அ) மூன்று முறை இப்படி சாப்பிட்டு வர உடம்புக்குள் ‘ஏர் கண்டிஷனர்’ போட்டது போல் இருக்கும்! அதோடு, இந்த ரெசிபி ஜீரண சக்தியைத் தூண்டி விட்டு, கழிவுகளை சுத்தமாக வெளியேற்றிவிடும்! இன்னொரு முக்கியமான விஷயம்... வெந்தயக்கீரை நம்முடைய சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். ஸோ... தோலில் சுருக்கம் வேண்டாமென்றால், வெந்தயக்கீரைதான் வேண்டுமென்று உங்கள் கடைக்காரரிடம் கேட்டு வாங்குங்கள்!

காய்கறி சாலட் மற்றும் பழச்சாறுகள்

அந்தந்த சீஸனில் கிடைக்கும் காய்கறி, பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு விடுங்கள். இயற்கையான காய்கறி, பழங்களிலிருக்கும் விட்டமின்களும், சத்துக்களும் தோலில் சுருக்கம் வருவதற்கே அனுமதி கொடுக்காது!

வாரம் ஒன்று (அ) இரண்டு முறை ஆரஞ்சு ஜூஸோ, கேரட் ஜூஸோ குடித்து வர சருமம் ஈரப்பதத்துடன், பளபளப்பாக இருக்கும்.

குறிப்பு : (வாரம் 2 முறைக்கு மேல் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது அல்ல.)

துவர்ப்பு சுவையும் தேவை!

அறுசுவைகளில், துவர்ப்பு சுவைதான் நம்முடைய இளமைக்கு செக்யூரிட்டி! வாழைப்பூ, வாழைத்தண்டு, பெரிய நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, நம் இளமையின் ஆயுள் அதிகரிக்கும்! (அதியமான், ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததின் சீக்ரெட் இதுதாங்க...)

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner