பாட்டி வைத்தியம்-2
வாயு தொந்தரவை அகற்றி உடம்பை சீர் பண்ணக்கூடியது பிரண்டை.
ஏதோ ‘அமீபியாஸிஸ்’னு சொல்றாங்களே...
அதுக்கும் கூட, பிரண்டைதான் சரியான மருந்தாம்!
இந்த அகத்திக் கீரை தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சி. தலைமுடியும் கருகருனு நீண்டு வளரும். இந்தத் தைலம் தேய்ச்சுக் குளிச்சா பித்தம் தணியும். பித்தத்தினால வர்ற தலைவலியும் போயே போயிடும்.
சரி, அகத்திக் கீரை தைலம் எப்படி தயாரிக்கறது?
அகத்திக் கீரை ஒரு கட்டோ ரெண்டு கட்டோ வாங்கி இலைகளை மட்டும் எடுத்துக்கோங்க. அதை சுத்தமா அலம்பி, உரல்ல போட்டு இடிச்சு சாறு எடுக்கணும். தண்ணி விடத் தேவையில்லை. மிக்ஸில அடிச்சா சூடேறி, சாறோட சத்து முழுமையா கிடைக்காம போயிடலாம். அதனாலதான் உரல், அல்லது அம்மில இடிக்கச் சொல்றேன்.
இப்படி எடுத்த சாறு 200 கிராம் இருந்தா, அதே 200 கிராம் அளவுக்கு நல்லெண்ணெய் சேர்க்கணும். அப்புறம், நாட்டு மருந்துக் கடைகள்ல தலா பத்து கிராம் அளவுக்கு கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், விளாமிச்சை வேர், சாம்பிராணி வாங்கி, எல்லாத் தையும் சேர்த்து மிக்ஸில பொடிபண்ணி அந்த எண்ணெய் கலவையில சேர்த்து, ஒரு இரும்பு வாணலில விட்டு காய்ச்சணும். அகத்திக் கீரை சாறு சுண்டி, தைலம் பதத்துக்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிடலாம். ஆறினதும் ஒரு பாட்டில்ல விட்டு வச்சுக்கோங்க.
இப்பல்லாம் நொடிக்கொரு தரம் காபியைக் குடிச்சுக் குடிச்சு நிறைய பேருக்கு பித்தம் ஏறிடுது. இவங்களுக்கு சாப்பாடு வேண்டியிருக்காது. ‘அன்ன துவேஷம் பிடிச்ச மாதிரி இருக்கியே?’ம்பாங்க அந்தக் காலத்துல! இப்படி பித்தக் கோளாறு உள்ளவங்களுக்கு அற்புதமான ஒரு மருந்துதான் வேப்பம்பூ ரசம்!
காய்ந்த வேப்பம்பூ ரெண்டு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கோங்க. வாணலில அரை டீஸ்பூன் நெய், அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊத்தி... காய்ஞ்சதும் கடுகு, வேப்பம்பூ, ஒரு மிளகாய் வத்தல் (காரத்துக்கு தகுந்த மாதிரி) போட்டு தாளிச்சு, புளிக்கரைசல் ஊத்தி, தேவையான உப்பு போடுங்க. ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் போட ணும். ரசம் நுரைச்சு வர்றப்போ கொஞ்சம் தாராளமாவே பெருங்காயத்தூள் தூவி, நறநறப்பா பொடிச்ச ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகத் தூளை தூவி இறக்குங்க.
சூடா சாதத்துல அரை டீஸ்பூன் நெய் ஊத்தி, இந்த ரசத்தை தாராளமா விட்டு பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. வாய்க்கு அவ்வளவு ருசியா இருக்கும். பித்தத்தை தணிய வெச்சு, பசியைத் தூண்டி உடம்பை கலகலனு ஆக்கும் இந்த வேப்பம்பூ ரசம்.
சிலருக்கு வாயு தொந்தரவு இருக்கும். அதை அகற்றி உடம்பை சீர் பண்ணக் கூடியது பிரண்டை.
அந்தக் காலத்துலயெல்லாம் வீட்டுலயே அப்பளம் தயார் பண்ணுவோம். அந்த அப்பள மாவுல கட்டாயம் பிரண்டை சாறு சேர்ப்போம். அது தவிர அப்பப்ப தினப்படி சமையல்ல பிரண்டை துவையல் செய்வோம். அதனால உருளைக்கிழங்கு அது இதுனு ஒரு பிடி பிடிச் சாலும் வீட்டுல யாருக்கும் வாயுத் தொந்தரவு இருக்காது.
நேரத்துக்கு சாப்பிடாம... கண்ட கண்ட ஓட்டல்ல எல்லாம் சாப்பிடறதால எத்தனையோ வயித்துக் கோளாறுகள் வருதில்லையா? ஏதோ, ‘அமீபியாஸிஸ்’னு சொல்றாங்களே... அதுக்கு சரியான மருந்து பிரண்டைனு என் டாக்டர் பேத்தி சொன்னா! சரி, பிரண்டை துவையல் பண்றது எப்படினு சொல்றேன், கேளுங்க...
பிரண்டையைத் தொட்டா கை அரிக்கும். அதனால கைல கொஞ்சம் எண்ணெய் பூசிக்கிட்டு வேலையை ஆரம்பிங்க. 50 கிராம் பிரண்டையை எண்ணெய் விட்டு வதக்கி, அதோட ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த உளுத்தம் பருப்பு, சுண்டைக்காய் அளவு புளி, ஒரு சின்ன கட்டி பெருங்காயம், ஒண்ணு அல்லது ரெண்டு மிளகாய்ப் பழம், தேவையான உப்பு, சுண்டைக்காய் அளவு வெல்லம் சேர்த்து அரைச்சு எடுத்தா, அதுதான் பிரண்டை துவையல்!
பிரண்டையை வதக்கி, வறுத்த உளுத்தம்பருப்பு, மிளகாய், உப்பு, பெருங்காயம், புளி, வெல்லம் சேர்த்து அரைச்சு உருண்டை பண்ணி, வெய்யில்ல காய வெச்சு வத்தல் மாதிரி ஆனதும் எடுத்து டப்பாவுல போட்டு வையுங்க. தேவையானப்போ எண்ணெய்ல வறுத்து வடகம் மாதிரி அப்படியே சாப்பிடலாம். அல்லது குழம்பு, கூட்டுல போட்டாலும் ருசிக்கும்!

0 comments:
Post a Comment