Ads Header

Pages


12 May 2012

பூண்டு ஒரு சிறந்த மருந்து!

வியாதிகளை விரட்ட பூண்டு ஒரு சிறந்த மருந்து!

ஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட, டாக்டரிடம் போக அவசியமே ஏற்படாது என்பார்கள்.

பூண்டு மிகச் சிறந்தது, உடல் ஆரோக்கியத்திற்கு. உடம்பில் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து மென்று சாப்பிட கொழுப்பு போயே போய் விடும்! தினமும் தவறாது நாட்கணக்காக, மாதக்கணக்காகச் சாப்பிட வேண்டும், இது எனது சுய அனுபவம். அனேகப் பேருக்கு பூண்டின் வாசனைப்பிடிக்காது.

அதுவும் பச்சையாக மென்றுச் சாப்பிட பூண்டின் வாசனை அதிகமாகவே இருக்கும். பூண்டு சாப்பிடுபவர்களின் வியர்வையில் கூட வாசனை நன்கு தெரியும். ஆனால் அநேக வியாதிகளை விரட்ட பூண்டு ஒரு சிறந்த மருந்து.

* 'மூலம்' உள்ளவர்கள் பூண்டு சாப்பிட நாளடைவில் சிறந்த குணம் காணலாம்.

* இரத்தத்தை சுத்தம் செய்யக் கூடியது பூண்டு.

* உடம்பில் உள்ள நச்சுப் பொருட்கள் அழியவும் பூண்டு உதவும்.

* பிரசவித்த பெண்மணிகளுக்கு சிறந்த வரப்பிரசாதம். நெய்யில் வதக்கி நன்கு வேகவைத்து உணவில் சேர்த்துக் கொள்ள பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அதிகமாகவே கிடைக்கும்.

பூண்டு உரித்து நன்கு வதக்கி (நெய்யில்) பாலில் கலந்து இரவு தூங்கப் போகும் முன்பு குடித்தால் நன்கு உறக்கம் வரும். பூண்டு வாசனை பிடிக்காதவர்களுக்கு பூண்டை வெண்ணெயில் சிறிது (ஒரு சிமிட்டா உப்பு) உப்பு சேர்த்து வதக்க அதன் துர்வாசனை போயே போய்விடும். சமையலில் முக்கியமாக புலாவ், சன்னா, குருமா, கோப்தா, பூண்டு ரசம் கோபி மஞ்சூரியன் என அநேக உணவு வகைகளில் பூண்டை சேர்த்துக் கொள்ள அதன் ருசியே அலாதிதான்.

பூண்டை எளிதாக உரிப் பதற்கு : வெறும் வாணலியில் எண்ணெய் விடாது வறுத்து ஆறியபின் கையில் தேய்த்தால் தானே எளிதில் உரிக்கலாம். தண்ணீரில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் (வெதுவெதுப்பான நீர்) ஊற வைத்து உரித்தால் இன்னும் சுலபம். உரித்த பூண்டை வெகு நேரம் திறந்து வெளியே வைக்கக் கூடாது. அதன் உணவுச் சத்து குறைந்துவிடும். கசந்தும் போய்விடும். நமக்குத் தேவையான சமயத்தில் உரித்து உபயோகிக்க வேண்டும். உரித்த பூண்டு கெடாதிருக்க வினீகரில், ஒரு கண்ணாடி ஜாடியில், போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாதிருக்கும். பூண்டை சிவக்க வறுத்து சமையல் செய்ய அதன் ருசி கூடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner