முடி கொட்டுவதைத் தடுக்க, தலை முடியை பலப்படுத்தி அதன் வளர்ச்சியைத் தூண்ட இதோ சில உணவுகள்!
நெல்லிக்காய், தயிர் பச்சடி
ஒரு கப் தயிரில், 4 அல்லது 5 முழு நெல்லிக்காய்களை நறுக்கிப் போட்டு சிறிதளவு இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து பச்சடியாக சாப்பிட்டு வந்தால் உடலும் குளிர்ச்சியடையும். முழு நெல்லிக்காய் முடி வளர்ச்சியையும் தூண்டும்!
வெள்ளரி சாலட்
நறுக்கிய வெள்ளரியுடன், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து ‘சாலட்’டாக சாப்பிடலாம்... இது வெயிலுக்கேற்ற கூல், கூல் சாலட்!
2 கப் மோருடன் நீராகாரம் லெமன் ஜூஸ் சேர்த்து நீர் மோராக குடிக்கலாம். வெயில் காலத்தில் நீர் மோரை அடித்துக் கொள்ள எந்த ஃப்ரெஷ் ஜூஸாலும் முடியாது!
உணவில் இரும்புச் சத்து அதிகமுள்ள கீரைகள், காய்கறிகள், பேரீச்சை, அத்தி போன்ற பழ வகைகள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் கூந்தல் அழகில் வெயில் வெட்கப்பட்டு ஓடி விடும்!
பொதுவாக தலைக்கு ஹென்னா போட்டால் சைனஸ் தொல்லை ஏற்படும் என்பது பலருடைய கருத்து. ஆனால் ஹென்னாவில் எலுமிச்சை சாறு சேர்க்காமல் தலையில் தடவினால் சைனஸ் பிரச்னை ஏற்படாது.
வெயில் காலத்தில் அதிகமாக ஏற்படும் வியர்வையும், அழுக்கும்தான் பேன்களின் உற்ற நண்பர்கள்! இதனால் நம் தலையில் அதிகமாக அரிப்பு ஏற்படும். தாங்க முடியாமல் அழுத்தி சொறிந்து விட்டால் தலையெல்லாம் ரணமாகும். முடியோ பொல, பொலவென கொட்டும். இந்த பேன் தொல்லைக்கு ஒரே தீர்வு... வேப்பெண்ணெயை தலையில் நன்றாகத் தடவி நீராவிக் குளியல் (ஸ்டீம் பாத்) எடுத்தால் போதும்... பேனா? மூச்!

0 comments:
Post a Comment