மூன்றே வழிகளில் சிகப்பழகு!
தேகத்தை பொலிவாக்கும் தேங்காயின் அழகு சேவை !
சிலருக்கு முகம் இளமையாக இருக்கும். ஆனால், கைகள் சுருக்கம் விழுந்து வயதான தோற்றத்தைத் தரும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இது.
1 துண்டு தேங்காயுடன், ஒரு பாதாம்பருப்பை சேர்த்து நன்றாக அரைத்து கைகளில் பூசி கழுவுங்கள்.
தொடர்ந்து ஒரு வாரம் இப்படிச் செய்து வந்தாலே சுருக்கம் மறைந்து கைகள் வாழைத்தண்டு போல் மினுமினுக்கும்.
தேமலும் படையுமாக படையெடுத்து வந்து தொல்லை பண்ணுகிறதா? சூப்பர் வைத்தியம் இருக்கிறது இந்த தேங்காய் பேஸ்ட்டில்...
கருஞ்சீரகம் & 1 டீஸ்பூன், கொப்பரை தேங்காய் & 1 துண்டு... இரண்டையும் அரைத்து தேமல், படை இருக்கும் இடங்களில் ‘பத்து’ மாதிரி போட்டு, காய்ந்ததும் அலசுங்கள்.
தொடர்ந்து இப்படி ஒரு வாரம் போட்டு வர, தேமலும் படையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
இன்றைய இளசுகளின் மாபெரும் பிரச்னையான இளநரையை, வராமலேயே தடுத்துவிடும், இந்த ‘ஹோம் மேட்’ ஷாம்பு!
நெல்லிமுள்ளி, செம்பருத்தி இலை, மருதாணி இலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, பொடி செய்யுங்கள். அதிலிருந்து 4 டீஸ்பூன் எடுத்து, இதனுடன் தேங்காய்ப் பால் & 2 டீஸ்பூன், கொஞ்சம் டீ டிகாஷன் (பேஸ்ட் ஆகும் அளவுக்கு) கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
வாரம் ஒருமுறை இதுபோல குளித்து வந்தால், இளநரை கிட்டவே வராது.
திடீரென்று முன்புற முடி கொட்டி, வழுக்கையாகி கவலைப்படுகிறீர்களா? இதற்கும் தீர்வு இருக்கிறது தேங்காயில். 2 டீஸ்பூன் தேங்காய்ப் பாலில் ஒரு சின்ன வெங்காயத்தை ஊறவைத்து, மை போல அரை யுங்கள். இந்த விழுதை முடி கொட்டிய பகுதியில் பத்து போல பூசி, நன்றாக தேய்த்து அலசுங்கள்.
வாரம் ஒரு முறை இப்படி செய்து வாருங்கள். விரைவிலேயே வழுக் கையை மறைத்தபடி, முடி முளைக்கத் தொடங்கிவிடும்.
நுனி முடியில் பிளவு ஏற்பட் டால், ஒட்டுமொத்த கூந்தலின் வளர்ச்சியும் பாதிப்படையும். இந்தப் பிளவைப் போக்கி, முடி வளர இதோ, ஒரு எளிய வழி...
தேங்காய்ப் பால் & அரை கப், பொன்னாங்கண்ணி கீரை ஜூஸ் & அரை கப்... இரண்டையும் கலந்து 3 டீஸ்பூன் பயத்தமாவை சேர்த்து தலைக்கு ‘பேக்‘ போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள்.
வாரம் இரண்டு முறை உபயோகித்தால், நுனி பிளவு மறைந்து முடி வளரும்.
தூக்கமில்லாமல் திருகுவலியால் அவதிப்படும் பச்சிளங்குழந்தை களுக்குத் தூக்கம் தரும் வள்ளலாகவும் இருக்கிறது தேங்காய்.
தேங்காய்ப் பாலுடன் பயத்த மாவை கலந்து குழந்தையின் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவி வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுங்கள். பிறகு நன்றாக துவட்டி சாம்பிராணி போடுங் கள்.
இப்படி செய்தால், குழந்தை குறைந்தது ஆறு மணி நேரம் நிம்மதியாகத் தூங்கும்.
கே& ப
‘‘என் உடலில் வெயில் படும் இடங்களில் சருமத்தின் நிறம் கருத்திருக்கிறது. இந்தக் கருமையைப் போக்கி, சிகப்பழகு பெற டிப்ஸ் ப்ளீஸ்...’’
‘‘வெயில் படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும், மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன.
தலையை கவனிப்பது முதல் வழி.
தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால்தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத் தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இந்த இரண்டையும் ஈடுசெய்ய ஒரு ஸ்பெஷல் சீயக்காய் பவுடர் இருக்கிறது.
சீயக்காய் & கால் கிலோ, பயறு & கால் கிலோ, வெந்தயம் & கால் கிலோ, புங்கங்கொட்டை & 100 கிராம், பூலான் கிழங்கு & 100 கிராம்... இவற்றை நன்றாக மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் அந்த ஸ்பெஷல் சீயக்காய் பவுடர்.
வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை ஒரேயடியாக ஓடிப் போகாமல், கருமையும் மறைய தொடங்கும்.
அடுத்ததாக கவனிக்கவேண்டியது, சருமம்!
வெளியில் போவதற்குமுன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.
வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால், நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக இதோ, இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்தினால், சருமம் மிளிரும்.
பயத்தம்பருப்பு & 100 கிராம், கடலைப்பருப்பு & 100 கிராம், பூலான்கிழங்கு & 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் & 50 கிராம், வெள்ளரி விதை & 100 கிராம், வெட்டிவேர் & 25 கிராம்... இவற்றை மிஷினில் அரைத்து, தினமும் பூசி குளியுங்கள்.
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்தக் குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சை ஜூஸ் & 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் & 1 டீஸ்பூன் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.
முகத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் கருமையை போக்க ஒரு இயற்கை ப்ளீச் சிகிச்சை இருக்கிறது. தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி, வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதை மஞ்சள் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசுங்கள். இது, முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகளை களைந்தெடுத்து முகத்தை பளிங்குபோல மாற்றிவிடும்.
உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால், கீரை, பச்சை காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.

0 comments:
Post a Comment