Ads Header

Pages


17 May 2012

கிச்’ டிப்ஸ் பளிங்கு பொருட்கள் பளிச்சிட!

கிச்’ டிப்ஸ்

பளிங்கு பொருட்கள் பளிச்சிட!

பிளவர் வாஷ், தேனீர் கோப்பை, தண்ணீர் டம்ளர் போன்ற கண்ணாடி மற்றும் பளிங்கினால் ஆன பொருட்களை பயன் படுத்தினால் அதன் அழகே தனிதான். ஆனால் அந்த பளிங்கு பொருட்களை தொடர்ந்து பளபளப்பாக வைத்திருப்பது என்பது கடினமான விஷயம். அவற்றை பராமரிப்பதற்கான சில டிப்ஸ் இதோ!

* கண்ணாடி பொருட்களை அலம்பிய பின், கடைசியாக கழுவும் தண்ணீரில் சிறிது வினிகர் மற்றும் போராக்ஸ் பவுடர் கலந்து கழுவ வேண்டும். அப்படி செய்தால் அவை எப்போதும் பளபளப்பாக இருக்கும்.

* கண்ணாடி பொருட்களை கழுவும் போது, கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டால், கண்ணாடி பொருட்களில் உராய்ந்து கீறல் விழுவதை தவிர்க்கலாம்.

* பளிங்கு மற்றும் கண்ணாடி பாத்திரங்களை, ஷெல்புகளில் நியூஸ் பேப்பரின் மேல் வைப்பதை தவிர்ப்பது நல்லது. நியூஸ் பேப்பர் இங்க்களில் காணப்படும் ரசாயனம், நாளடைவில் பளிங்கு பொருட்களின் பளபளப்பை மங்கச் செய்து விடும்.

* ஷெல்புகளில் பீங்கான் தட்டுக்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைப்பதால் உராய்ந்து கீறல் விழுகிறதா? அடுக்கி வைக்கும் போது, ஒவ்வொரு தட்டை அடுக்கிய பின்னும், ஒரு துணியை போட்டு பின் அதன் மேல் மற்றொரு தட்டு என அடுக்கலாம். இவ்வாறு செய்வதால் இரு தட்டுக்களுக்கு இடையே உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

* கண்ணாடி ஜன்னல்கள் மீது பெயின்ட் கறை படிந்து விட்டால், சிறிது வினிகரை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி, ஒரு துணியில் நனைத்து, பெயின்ட் கறை மீது தேய்த்தால் கறை காணாமல் போய்விடும்.

* கண்ணாடி பாட்டில்களில் துர்நாற்றம் அடிக்கிறதா? கவலையே வேண்டாம். அந்த பாட்டிலில் சிறிது கடுகைபோட்டு, வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் வையுங்கள். பின், வெந்நீரை கீழே ஊற்றி விட்டு துடைத்து காய வைத்தால் துர் நாற்றம் காணாமல் போய்விடும். கடுகுக்குப் பதிலாக உப்பை போட்டு ஊற வைத்தும் கழுவலாம்.

* கண்ணாடி மற்றும் பீங்கானாலான பவுல்கள், டம்ளர்கள் போன்றவற்றில் காணப்படும் கறைகளை அகற்ற, எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கறையுள்ள இடத்தில் தேய்த்து கழுவினால் கறை அகன்று விடும்.

* வாஷ் பேசினில் மஞ்சள் கறை படிந்திருந்தால், அவற்றின் மீது வினிகரை தெளித்து, சிறிது நேரம் தண்ணீர் ஊற்றி தேய்த்து கழுவினால் கறை காணாமல் போய்விடும்.

* வெள்ளை நிறத்தாலான வாஷ் பேசினை சுத்தம் செய்த பின், அதில் சிறிதளவு துணிகளுக்கு பயன்படுத்தப்படும் நீலம் கலந்த தண்ணீரை ஊற்றி கழுவினால் மிகவும் பளபளப்பாக இருக்கும்.

* கண்ணாடியாலான பிளவர் வாஷ்கள், எண்ணெய் ஊற்றி வைக்கும் ஜாடி, தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் அதிக நாட்கள் எண்ணெய் மற்றும் தண்ணீர் வைத்திருப்பதால் கறை ஏற்படும். அதை போக்க அதில் சிறிது வினிகரை ஊற்றி, கறையின் தன்மையை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒரு நாள் இரவு வரை ஊற விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner