மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், சாதம் ஊறி மாவு போல் கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் மோர் கலந்து விட்டுப் பாருங்கள். மறுநாளும் சாதம் மல்லிகைப் பூப்போல உதிர் உதிராக இருக்கும்.
ருசியாக ரிப்பன் பக்கோடா செய்ய ஒரு ஈஸி வழி. நறுக்கிய வெங்காயத்துடன் 3 காய்ந்த மிளகாய், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டுங்கள். இதை ரிப்பன் பக்கோடாவுக்கான மாவுடன் சேர்த்துப் பிசைந்து, அச்சில் இட்டு, குறைந்த தீயில் பொரித்தெடுங்கள். சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி!
வடிகட்டப்பட்ட பொருளையும் வீணாக்காமல் அதில் சிறிது கடலை மாவு கலந்து பக்கோடாவாகப் பொரிக்கலாம்.
பாட்டில்களை சோப் (அ) லிக்விடால் கழுவும்போது நுரை சீக்கிரத்தில் வெளியேறாது. இதற்கு, முதலில் பாட்டில்களில் தேவையான தண்ணீர் விட்டுக் குலுக்கி சுத்தம் செய்யவும். பிறகு, குழாயை மெதுவாக திறந்து விட்டு, அதனடியில் பாட்டில்களைப் பிடித்தால், பாட்டில் நிறைந்து எல்லா நுரையும் வெளியேறிவிடும். கழுவுவதும் ரொம்ப ஈஸி.
ரோஜா, சாமந்தி பூக்களை வாங்கும்போது சில சமயம் காம்பு ஒடிந்து போய் தலையில் வைக்கவோ.. சுவாமி படத்துக்கு மாட்டவோ முடியாமல் போக லாம். ஊதுவத்தி கொளுத்தி மிஞ்சியிருக்கும் குச்சியை பூவின் நடுவில் சொருகி விட்டால் போதும். பூ சூட்டுவதும், சூடிக் கொள்வதும் எளிது.
பிரெட்டை ஸ்வீட் அயிட்டமாக மாற்ற ஒரு சூப்பர் ஐடியா. ஒரு டம்ளர் பாலில் மூன்று (அ) நாலு டீஸ்பூன் மைதா, சர்க்கரை, சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் பிரெட்டை நனைத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு, தீயைக் குறைத்து இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பிரெட் மொறுமொறுப்புடன் அட்டகாசமாக இருக்கும்.
கறிவேப்பிலை காய்ந்து போகாமல் பசுமையாக இருக்க.. கறிவேப்பிலையை உருவி சுத்தம் செய்து, ஈரப்பசை இல்லாமல் உலர்த்தி எடுக்கவும். பிறகு மிக்ஸியில் நன்றாகப் பொடித்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். வாரக் கணக்கில் நிறம் மாறாமல் இருக்கும்.
வெயில் காலத்தில் இட்லி மாவு சீக்கிரத்தில் புளித்துவிடும். இட்லி, தோசைக்கு அரிசி, பருப்பைக் கழுவி ஊற வைக்கும்போது, ஒரு மணிநேரத்தில் அந்தத் தண்ணீரை வடித்து விட்டு, வேறு புதிய தண்ணீரை ஊற்றவும். இப்படி இரண்டு (அ) மூன்று முறை தண்ணீரை மாற்றி ஊற வைத்தால் மாவு சீக்கிரம் புளிக்காது.
மைதா, கோதுமை, அரிசி மாவுகளை தண்ணீர் விட்டுக் கரைக்கும் போது கட்டி கட்டியாகி விடும். இதற்கு, மாவை பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் தண்ணீரைப் பரவலாக விட்டு உடனே கலக்காமல் அப்படியே விட்டு வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்துக் கலக்கினால் மாவு கட்டியில்லாமல் கரைந்துவிடும்.
பாட்டில், டப்பாவின் மூடிகளைத் திறக்க முடியவில்லையா? கையில் விபூதியை நன்றாகத் தடவிக் கொண்டு திறந்தால், ஈஸியாக திறக்க வரும்.
முழு முந்திரிப் பருப்புகளை அப்படியே பாட்டில்களில் வைத்தால் அதில் பூச்சிகள் வந்து விடும். பருப்புகளை இரண்டாக உடைத்து வைத்துவிடுங்கள். நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இரண்டு கிராம்புகளை போட்டு வைத்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

0 comments:
Post a Comment