Ads Header

Pages


02 May 2012

துளசி! மூலிகை மருத்துவம்


கற்பூர மணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையுமுடைய சிறுசெடி துளசி. உடலிலிருந்து பாக்டீரியா, நச்சு கழிவுகளை நீக்குகிறது. நுரையீரல் தொடர்பான நோய்கள், சளி, இருமல், இரத்த அழுத்தம், கருப்பை கோளாறுகள், செரிமான சிக்கல் இவற்றை நீக்குகிறது. எல்லாவற்றுக்கம் மேலாக, இதிலுள்ள இயற்கை ‘‘மெர்குரி’’ உடலிலுள்ள ரசாயனங்களை கட்டுப்பாட்டில் வைக்கிறது. துளசி அனல் தன்மை கொண்டது. மூளை நரம்புகளில் ஏற்படும் தடையை நீக்க வல்லது. இதன் இலை, பூ, விதை ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

இதன் வகைகள் : வெண்துளசி (அற்கம், சிவதுளசி), கருந்துளசி, (கிருட்டின துளசி), சுக்ல துளசி, கந்ததுளசி (விச்சுவதுளசி, நாய்துளசி, பில்வதுளசி, விசுவகந்ததுளசி), காட்டுத்துளசி (பூதுளசி, பூததுளசி), நல்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி.

இதன் மருத்துவக் குணங்கள் : துளிசியின் இலைகளை பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறை எடுத்து 5 மில்லி இருவேளைச் சாப்பிட்டு வர, பசியை அதிகரிக்கும். இருதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும் சளியை அகற்றும் தாய்ப்பாலை மிகுதியாக்கும்.

வெண்துளசி இலை எடுத்து சாறு பிழிந்து 50 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் சம அளவு தேன்கலந்து உட்கொண்டால், கபத்தினால் தோன்றிய இருமல் குணமாகும்.

துளசிஇலை 20, தோல் நீக்கிய இஞ்சி 2 கிராம் சிதைத்து 200 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மில்லி வீதம் குடித்து வர, பித்த சீதளகாய்ச்சல் 3 நாளில் நீங்கும்.

வெண்துளசி இலைசாறு பிழிந்து கொதிக்க வைத்து, சம அளவு தேன் கலந்து கண்களில் மைபோல இட்டால், கண்பொங்குதல் தனியும்.

ஒரு கைபிடி அளவு இதன் இலையை சிதைத்து, அரைலிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகும் வரை வற்ற வைத்து, வடிகட்டி 15 கிராம் கற்கண்டு, 2 தேக்கரண்டி தேனும் கலந்து தினம் 4 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர, மார்பு நோய், காசநோய், காய்ச்சல் குணமாகும்.

இதன் இலைச்சாறு 2 சொட்டு, வெள்ளைபூண்டு அரைத்தசாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டால் சீழ் வடிதல் குணமாகும்.

துளசி இலை 50 கிராம் மிளகு 50 கிராம் அரைத்து பயிர் அளவு மாத்திரை ஆக்கி, இரண்டு வேளை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலவிதமான காய்ச்சல் குணமாகும்.

துளசி வேர் சுக்கு வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்து, நாள்தோறும் காலையில் வெந்நீரில் சுண்டக்காய் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் குட்டம் குணமாகும்.

துளசி விதை 10 கிராம், அரசவிதை 10 கிராம் சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக்கி 2 வேளை 1 மாத்திரை வீதம் பாலில் கலந்து சாப்பிட கணச்சூடு நீங்கும்.

துளசி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் 1 பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

இதன் இலைச்சாறு 1 மில்லி, தேன் 5 மில்லி, வெந்நீர் 50 மில்லி கலந்து இரு வேளை நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இதயநோய் சாந்தமாகும்.

இதன் இலைச்சாறு ஒரு பங்கு இஞ்சி இரண்டு பங்கு கலந்து கசாயம் செய்து நான்கு வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

கருந்துளசி இலை 25, செம்பரத்தம் பூ2, அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிக்கட்டி 2 மணிக்கு ஒருமுறை 50 மில்லி வீதம் 10 நாட்கள்குடித்து வர இருதயத்தில் குத்து வலி, பிடிப்புவலி குணமாகும்.

துளசி இ,லைச்சாறு 100 மில்லி எடுத்து கொதிக்க வைத்து சிறிது மிளகு தூள் சேர்த்து காலையில் குடித்தால் உடனே காய0��ாளைக்கு 6 வேளை 20 நாட்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத்துடிப்பும், இதயத்தைக் கட்டிப்போட்டது போன்ற வலியும் குணமாகும்.

இதன் இலை 10, ஠��் காய்ச்சி வடிகட்டி 2 தேக்கரண்டி தேன்கலந்து 50 மில்லி வீதம் 1 நாளைக்கு 6 வேளை 20 நாட்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத்துடிப்பும், இதயத்தைக் கட்டிப்போட்டது போன்ற வலியும் குணமாகும்.

இதன் இலை 10, மிளகு 10 இவ்விரண்டையும் நன்கு மென்று தின்றால் மலேரியாக்காய்ச்சல் குணமாகும்.

இதன் இலை 1 கைபிடி, இஞ்சி 1 துண்டு, தாமரை வேர் 40 கிராம் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பற்றுப்போட்டு வர, விலாவலி குணமாகும்.

துளசி இலை 10 கிராம் மிளகு தூள் 10 கிராம் பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

இதன் இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு 2 வேளை 2 துளி வீதம் காதில் விட்டு வர 15 நாளில் காது மந்தம் நீங்கும்.

துளசி இலை பொடி, சுக்குத்தூள், ஓமப்பொடி, சம அளவாக எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், சிலேத்துமக்காய்ச்சல் (இன்பிளூயன்சா) குணமாகும்.

துளசிச்சாறு, கரிசாலைச்சாறு இரண்டையும் கலந்து காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி, இரத்தம், சீழ்வடிதல் குணமாகும்.

துளசி கசாயத்தில் ஜாதிக்காய் தூளைக் கலந்து குடித்தால் அதிசார பேதி தனியும்.

துளசிப்பூங்கொத்து, திப்பிலி, வசம்பு சம அளவு சூரணமாகப் பொடி செய்து அத்துடன் 4 மடங்கு சர்க்கரை சேர்த்து 1 சிட்டிகைப் பொடியை தேனீல் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் குணமாகும்.

துளசி விதையை நீரில் ஊரவைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அதிசாரம் தணியும்.

துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தாம்பூலத்துடன் கலந்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.

துளசி இலை 10 கிராம் சிறிதளவு கரி உப்பு கலந்து வெந்நீருடன் சாப்பிட அசீரணம் தணியும்.

துளசி இலை மிளகு, ஓமம், பூண்டு, இந்து உப்பு, தூயகற்பூரம் இவற்றை சம அளவாக எடுத்து சிறிது நீர் விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரைகளாகச் சாப்பிட்டால் வாந்தி பேதி நிற்கும்.

துளசி இலையை சாறு பிழிந்து 200 மில்லி கொதிக்க வைத்து சிறிது சர்க்கரை கலந்து உட்கொண்டால், இரத்த பித்த நோய் தணியும்.

துளசி இலை சாறு 100 மில்லி, ஆடாதொடை இலைச்சாறு 100 மில்லி சேர்த்துக்கொதிக்க வைத்து குடித்தால் இருமல் நிற்கும்.

துளசி இலை, சுக்கு, பிரம்ம தண்டு, கொள்ளு இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து 200 மில்லி அளவு குடித்தால் இழுப்பு நிற்கும்.

துளசி இலை, துளசி மலர்க்கொத்து இவ்விரண்டையும் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயம் செய்து பழைய வெல்லம் சிறிது சேர்த்து குடித்தால் விக்கல், இழுப்பு நிற்கும்.

இதன் இலைச்சாறு 200 மில்லி எடுத்து சிறிதளவு இந்து உப்பு கலந்து குடித்தால் கால், கை, வலி குணமாகும்.

துளசி இலை, ஆமணக்கு வேர்சார் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயமாக்கி காய்ச்சி குளிர்ந்த பின்பு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் வாதநோய் குணமாகும். துளசி இலைச்சாறு பிழிந்து 200 மில்லி எடுத்து காய்ச்சி சிறிது மிளகுத் தூள், பசுமை கலந்து சாப்பிட்டால் வாதத்தினால் தான்றும் வீக்கம் குணமாகும்.

துளசி விதையை பொடியாக்கி 20 கிராம் இரண்டு வேளை சாப்பிட்டு வர நரம்புகளில் வலி, சிறுநீர் தடை குணமாகும்.

துளசி இலை சாறு 200 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் இஞ்சி கசாயம் செய்து கலந்து சூடு உள்ளபோது குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

இதன் விதையை பொடியாக்கி 10 கிராம் காலையில் தொடர்ந்து தின்று வர நீரிழிவு தணியும்.

துளசி விதைப் பொடி 20 கிராம் பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் தணியும். விந்து வளர்ச்சியும் உண்டாகும். (2 வேளை 40 நாட்கள் குடிக்கவும்)

துளசி வேரை பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை வெற்றிலையுடன் மென்று தின்றால், கனவில் விந்து வெளியேறுதல் நீங்கும்.

துளசியிலையைச் சாறு பிழிந்து 200 மில்லியாக எடுத்து கொதிக்க வைத்து 25 மில்லி தேன் கலந்து காலையில் குடித்து வர உடல் பருமன் குறையும்.

துளசி உலர்ந்து இலை 10 கிராம், சடாமாஞ்சில் 2 கிராம் அக்கராகாரம் 12 கிராம், உப்பு 8 கிராம் களிப்பாக்கு 5 கிராம், சீமை வாதுமைக் கொட்டையின் கரித்தூள் 10 கிராம், ஏல அரிசி 8 கிராம் சேர்த்து எடுத்து பொடியாக்கி 2 வேளை சாப்பிட்டு பிறகு பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.

மாத விலக்கு காலங்களில் பெண்கள் குளித்தப்பின் துளசி விதையை நீருடன் ஊற வைத்து நெல்லிக்காயளவு 3 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை தூய்மை பெற்று கரு தங்கும்.

துளசி சுரசம் 20 கிராம், மணத்தக்காளி இலைச்சுரசம் 20 கிராம், அமுக்கிரா கிழங்கு சுரசம் 10 கிராம் சேர்த்து தேன் 10 கிராம் கலந்து 7 நாட்கள் குடித்தால் பிள்ளை பெற்றதும் தோன்றும் தாய்ப்பால் தூய்மை பெறும்.

துளசி இலைச் சுரசம் 20 கிராம் அரிசிக் கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு பால் சோற்றை உணவாகக் கொண்டால் பெரும்பாடு நீங்கும்.

துளசி இலைச் சுரசத்தில் கற்கண்டுத்தூள் செய்து கலந்து குடித்தால் இரத்தப் பெரும்பாடு நீங்கும்.

காட்டுத் துளசி விதைகளை பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகை சாப்பிட்டு வர உள்மூலம் (பௌத்திரம்) குணமாகும்.

துளசி வேர்த்தூள், காரும் கருணைத்தூள் சம அளவு எடுத்து ஒரு சிட்டிகை பொடியுடன் வெற்றிலையுடன் மென்று தின்றால் விந்து விரைவில் வெளியாகாமல் கட்டுப்படும்.

இராமதுளசி மற்றும் துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு வெற்றிலையுடன் சாப்பிட்டால், விந்து கட்டுப்படும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner