Ads Header

Pages


10 May 2012

இஞ்சி, சுக்கு, கடுக்காய்...மருத்துவ டிப்ஸ்!

மருத்துவம்

கேள்வி:

இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை முறைப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டால் கோலூன்றி நடக்கவேண்டியிருக்காது என்கிறார்கள். ஆனால் அதை தொடர்ந்து சாப்பிட்டால் பல பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பாக உடல் சூடாகி விடுகிறது. பிரச்சினைகள் இன்றி ஒரு மண்டலம் சாப்பிட்டு பலன் அடையும் முறையை விளக்குங்கள்?

சித்த மருத்துவர் `இஞ்சி, சுக்கு, கடுக்காயில் என்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன- எந்த அளவில்- எந்த நேரத்தில்- எப்படி சாப்பிட்டால் இளமையை தக்கவைக்க முடியும்' என்று விளக்குகிறார்.
பதில்:

இஞ்சி: சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. அதனால் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுவலி போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது `ஆன்டி ஆக்சிடென்ட்' ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இஞ்சியில் இருக்கிறது.

இஞ்சி ஈரப்பதம் மிக்கது என்பதால் ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரித்து, ஜீரண நீரை நன்றாக சுரக்கச்செய்யும். இதனால் ஜீரணம் எளிதாக்கப்படும். இதில் சுண்ணாம்பு சத்து அதிகம். இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்து பருகவேண்டும். அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும். ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கக்கூடிய ஆஸ்பிரின் போன்ற மாத்திரை, மருந்துகளை சாப்பிடக்கூடியவர்களும், உடல் உஷ்ணத்தன்மை கொண்டவர்களும் குறைந்த அளவிலே இஞ்சி சாறு பருகவேண்டும்.

சுக்கு: ரத்தக் குழாய்களின் செயலை மேம்படுத்தி, இதய இயக்கத்தை வலுவாக்குவது சுக்கின் பணி. சுக்கில் இருக்கும் காரத்தன்மை, ஜீரணத்திற்கு பிறகு மீதமிருக்கும் பித்த நீரை சமன்செய்துவிடும். அதனால் வயிற்றுப் புண் ஏற்படுவது தடுக்கப்படும். ஏற்கனவே புண் இருந்தாலும் ஆற்றும். மலச்சிக்கல் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளும். எஞ்சிய பித்த நீர் சமன்செய்யப்படாவிட்டால் அது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கொலாஸ்ட்ரால் ஆகிவிடும். மதிய உணவுக்குப் பிறகு 5 கிராம் சுக்கு தூளை சுடு நீரில் கலந்து பருகவேண்டும்.

கடுக்காய்: அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும்.

இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக சாப்பிடலாம். சாப்பிடுவது நன்றாக ஜீரணம் ஆகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும். இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட நாள் வாழலாம். அதனால்தான் "காலையில் இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..''- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner