Ads Header

Pages


05 May 2012

கீரைகளின் மகத்துவம்!

கீரையின் மகத்துவம்
கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும் வைட்டமீன்கள் அதிகம். சத்து அதிகம் மிக்க சில கீரை வகைகளைப் பார்ப்போம்.

அகத்திக்கீரை: அகத்திக்கீரை ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்கலைப் போக்கும்.அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்புடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்துச் சாப்பிடலாம்.அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு, வர மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

அரைக்கீரை: புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கீரை அரைக்கீரையாகும். காய்ச்சலால் எற்படும் உடல் நடுக்கம், கபரோகம், வாதநோய் ஆகிய நோய்களை அரைக்கீரை சரி செய்கிறது. ரத்தத்தை விருத்தி செய்து சோர்வைப்போக்கி உடல்நலத்தை சீராக்கும். தாது விருத்தியைத் தந்து உடலின் சக்தியைப் பெருக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சிறுகீரை: பெயரில் தான் சிறுகீரையே தவிர பலன்கள் அதிகம். இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும். காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும். பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை. உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

தூதுவளைக்கீரை: தூதுவளை இலை முட்களுடன் இருக்கும். அவைகளில் உள்ள முட்களை நீக்கி உபயோகிக்க வேண்டும். இதைப்பச்சடியில் சேர்க்கலாம். கூட்டாகவும் வைக்கலாம். துவையல் செய்தும் சாப்பிடலாம். விந்து நஷ்டம், மேலிழைப்பு, காசநோய், காதுமந்தம் ஆகியவற்றுக்கு தூதுவளை கை கண்ட மருந்து.

புதினாக்கீரை: சிறுநீரகங்களை பலப்படுத்தக்கூடிய கீரை புதினாக்கீரை. புதினாக்கீரையை துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட, பசி எடுத்து சாதம் அதிக அளவில் உள்ளே போகும்.

புளிச்சகீரை: நுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர் செய்யும் கீரை புளிச்சகீரை. புளிப்பு ருசியுடைய இந்தக்கீரைக்கு சுக்காங் கீரை என்ற பெயரும் உண்டு. தேகத்திற்கு மிக்க வலுவைத் தரும். போகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். தீராத பித்தத்தை போக்கும். ரத்த பேதியை சரி செய்யும்.

பெண்களுக்கு வரும் மார்புப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உண்டு.

பொன்னாங்கண்ணிக் கீரை: உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர, கண்களைப்பற்றிய ரோகம் நீங்கும். உஷ்ணமண்டல ரோகம், தேகச்சூடு, முலரோகம் போகும்.

மணத்தக்காளிக்கீரை: நாவில் உள்ள புண் நீங்கும். உடலின் உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் சக்தி இந்தக்கீரைக்கு உண்டு.

முருங்கைக்கீரை: அக்கினி மந்தம், உட்சூடு, கண்தோஷம் யாவும் நீங்கும். உடல் சூட்டை தணித்து சமப்படுத்தும். பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும். உடலுக்கு நல்ல பலம் தரும். தாய்ப்பாலை சுரப்பிக்கும். தாதுவை விருத்தி செய்யும்.

முளைக்கீரை: ரத்த அழுத்த நோய்க்கு முளைக்கீரை சாப்பிடுவது நல்லது.

முடக்கத்தான் கீரை: இருமலுக்கு அருமருந்து. வல்லாரைக்கீரை மூளைத் திறனைப் பெருக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner