Ads Header

Pages


17 May 2012

என்றும் இளமையாய் வாழ முருங்கைக் கீரை!

ந்த இயந்திரத்தனமான உலகில் ஏதோ சமைத்து அவசர அவசரமாக உள்ளே தள்ளிவிட்டு வேலைக்குச் செல்லும் பழக்கம்தான் நம்மில் அநேகருக்கு...! என்ன செய்வது, வீட்டில் வேலையும் பார்த்து, அலுவலகமும் செல்ல வேண்டும் என்றால் கஷ்டமாக இருக்காதா?... என்று நம் வீட்டு அம்மணிகள் முணுமுணுப்பது புரிகிறது... உங்கள் கஷ்டம் புரியாமல் இல்லை, அதற்காக நம் சமையலில் ஆரோக்கியத்தை தவற விடலாமா?

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொண்டால், நம் உடல் நலத்தைப் பேண வேண்டியிருக்காது. ஆனால், பரபரப்பு நிறைந்த வாழ்க்கை சுழற்சியில் கீரைகளை பொறுமையாக வாங்கி சுத்தம் செய்து சமையல் செய்வதற்கு நேரம் ஏது...? தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கீரைகளை ‘என்றோ ஒரு நாள்’ என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நம்மிடையே உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி எல்லாம் குறைந்து சீர்குலைகிறது...

சாதாரண தலைவலி, ஜலதோஷம் போன்ற நோய்களைக்கூட, நம் உடல் எதிர்த்துப் போராட முடியாமல் சோர்ந்து விடுகின்றது... பிறகென்ன, மருத்துவரின் உதவியை நாடிச் செல்கிறோம்... இந்நிலை மாற வேண்டும்... அதற்கு என்ன பண்ணுவது...? ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டாலே போதும், நம் ஆரோக்கியம் மேன்மையடையும்... ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். அத்துடன், நம் ‘ஆரோக்கியம் கீரைகளின் கையில்’ என்ற புதுமொழியையும் கருத்தில் கொண்டு கீரைகளைச் சாப்பிடுங்கள்... உயிர்ச் சத்துக்களை எல்லாக் கீரைகளும் தன்னகத்தே கொண்டுள்ளன. அந்த வகையில் எல்லாக் காலமும் எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கைக் கீரை பல உயிர்ச்சத்துக்களை கொண்டதாகவும், மருந்தாகவும் நம் ஆரோக்கியத்தைப் பேணுவதில் உயிர்க்காப்பானாக செயல்படுகின்றன...

முருங்கைக் கீரையிலுள்ள உணவுச் சத்துக்கள்

தண்ணீர் : 63.8%
புரதம் : 6.1%
கொழுப்பு : 10%
தாதுஉப்புக்கள் : 4%
நார்ச்சத்து : 6.4%
மாவுச்சத்து : 18.7%

முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் நிரம்பப் பெற்றிருக்கின்றன... முருங்கைக் கீரை 108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது...

இக்கீரையில்,
வைட்டமின் ஏ : 11300/IU
(அனைத்துலக அலகு)
வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம்
(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு)
சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம்
குளோரின் : 423 மில்லி கிராம்
இரும்புச் சத்து : 259 மில்லி கிராம்
ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம்
கந்தகச் சத்து : 137 மில்லி கிராம்
மாங்கனீஸ் : 110 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் வைட்டமின் சி : 220 மில்லி கிராம் இருக்கின்றது. அதனால் இது எல்லோருக்கும் எந்த வயதினருக்கும் ஏற்ற மிகச் சிறந்த உணவு...

முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன... வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை...

முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்கா மலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இவ்விதம் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும்...

முருங்கைக் கீரையைச் சுத்தமாக ஆய்ந்து, அதை அம்மியில் வைத்துத் தட்டி எடுத்து கையில் வைத்துச் சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் (ஷீக்ஷீ) அரை அவுன்ஸ் எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கலக்கிக் குடிக்க வேண்டும். சிறிது நேரத்தில் பித்த நீர் வாந்தியாக வெளியேறிவிடும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு ஒரு தரம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் செய்ய வேண்டும்...

முருங்கைச் சாறு எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கரைத்து குழந்தையானால், அரைச் சங்களவும், பெரியவர்களானால் இரண்டு சங்களவும் கொடுத்தால் சிறிது நேரத்தில் வயிற்று உப்புசம் நீங்கும்... முருங்கைக் கீரைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி, வாதமூட்டுவலி முதலியவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கலாம்... முருங்கைக் கீரையையும், மிளகையும் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தலைவலிக்குத் தடவ குணம் காணலாம்... வீக்கங்களின் மீது பூச, வீக்கம் குறைவதைக் கண்கூடாகக் காணலாம்...

அடிவயிற்றுவலி, பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்றுவலி போன்றவற்றிற்கு முருங்கைக் கீரைச் சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேலை உண்டு வந்தால் மிகப் பலன் கிடைக்கும்...

முருங்கைக் கீரையினால் தயார் செய்யப்படும் சூரணம், உஷ்ண பேதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்... முருங்கைக் கீரையை உருவிய பின் நிற்கும் ஈர்க்குடன் கறிவேப்பிலை ஈர்க்கையும் சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம்... இக்கசாயம் வயிற்றில் உள்ள பூச்சிகளைப் போக்கும் தன்மையுடையது... உடலில் உண்டான நீர்க் கோவையை நீக்கி விடும்...

முருங்கைக் கீரையோடு இரு துண்டுப் பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு அரைத்துச் செய்யப்பட்ட மருந்து நாய்க்கடி நஞ்சை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது...

சர்க்கரை வியாதியை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன் போதிய அளவு எள் சேர்த்துச் சமைத்து உண்டு வர, கடுமையான சர்க்கரை நோய் விலகி, உடல் நலம் பெறும்...

இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படக் கூடியதுதான் முருங்கைக் கீரை... அதனால் அன்றாட உணவில் தவறாது முருங்கைக் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதுவரை முருங்கைக் கீரையின் மருத்து வத்தை நீங்கள் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்; இனிமேலாவது அதை நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், அதனால் எண்ணற்ற பலன்களை அடை யலாம்... மேன்மையான. ஆரோக்கியத்துடன் வாழலாம்... நோய்க்கு ஆட்படாத மனிதனின் முதுமை நிச்சயமாக தள்ளிப் போகும்... என்றும் இளமையாய் வாழலாம்... என்ன சொல்வது சரிதானே...! =

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner