மணத்துக்காக சமையலில் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் பல சத்துக்களும் இருக்கின்றன.
குறிப்பாக இரும்புச் சத்தும், வைட்டமின் ஏயும் கொத்தமல்லியில் அதிகம்.
கொத்தமல்லிக் கீரை இரண்டு அடி உயரம் வரை வளரும். மூன்று மாதங்களில் பூத்துக் குலுங்க ஆரம் பிக்கும். எனினும் இதைக் கீரையாகப் பயன்படுத்த வேண்டுமெனில் அதை பூக்கும் முன்பாகவே பறித்து விடவேண்டும்.
சற்று உரைப்புச் சுவையும், நல்ல மணமும் கொண்ட கொத்த மல்லிக்கு பசியைத் தூண்டும் தன்மை நிறையவே உண்டு. கொத்தமல்லியின் தண்டு, இலை, விதை ஆகிய மூன்றுமே உணவுக்கு மணம் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இதை அப்படியே பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு சட்டினி யாகவும் சேர்த்துக் கொம்ளலாம். இதன் இளம் கொழுந்தில் சட்டினி செய்து சாப்பிட்டால் நல்ல பலன் இருக்கும். குழம்பு, ரசம், மிளகு நீர் போன்றவற்றிற்கு மணமூட்டியாக மட்டுமின்றி சுவைïட்டியாகவும் இளம் கொத்தமல்லி திகழ்கிறது.
இக்கீரையில் ஜுஸ் செய்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் இதயம், மூளை, ஈரல் போன்றவை வலுப்படும். நன்கு வளர்ச்சியும் அடையும்.
கொத்தமல்லி நீர் சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றது. ஆண்உறுப்பில் ஏற்படும் கொப்பளங்களையும் புண்களையும் கொத்தமல்லி நீர் குணமாக்குகிறது.
வாய் துர்நாற்றம் இருப்பவர்கம் சிறிதளவு கொத்தமல்லியை வாயிலிட்டு மென்று சுவைத் தல் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும். பித்தம் தொடர்பான நோய்களையும் கொத்தமல்லி நீக்குகிறது.
பசியில்லாமல் அவதிப்பட்டு, மருத்துவர்களிடம் செல்பவர்கம் கொத்தமல்லிக் கீரையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் போதும். நன்கு பசியெடுக்க ஆரம்பித்துவிடும்.
தலை கிறுகிறுப்பு,வாந்தி, வயிற்றுவலி, வயிற்று மந்தம் ஆகியவையும் கொத்தமல்லியால் குணமடையும். தொடர்ந்து இக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும். கண்கம் ஒளி பெறும். ஜீரண சக்தி அதிகரித்து பசியும் எடுக்கும். வாத சம்பந்தமான நோய்களுக்கும் கொத்தமல்லிக் கீரை சிறந்த மருந்தாக திகழ்கிறது.
0 comments:
Post a Comment