Ads Header

Pages


07 May 2012

பாதங்களை பராமரிக்க சில "டிப்ஸ்'கள்!

பாதங்களை கவனியுங்க முக அழகையும், உடலழகையும் பராமரிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள், கை, கால்களின் அழகு குறித்து அதிக அக்கறை காட்டுவதில்லை. ஆனால், பல வேலைகளை நாம் கை, கால்களை கொண்டுதான் செய்கிறோம் என்பதால், அவற்றின் அழகை பராமரிப்பதும் மிகவும் முக்கியம்.

""நம்முடைய உடலின் எடை முழுவதையும் நம் பாதங்கள் தான் தாங்குகின்றன. அதனால், பாதங்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்,'' என்று டில்லியிலுள்ள "ஏசியன் ரூட்ஸ் ஸ்பா'வின் உரிமையாளர் காம்யானி கன்வர் கூறுகிறார்.

""வாரத்திற்கு ஒருமுறையாவது பாதங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களை இளஞ்சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து மசாஜ் செய்தால் பாதங்களிலுள்ள அழுக்குகளை நீக்கலாம்.
இதுதவிர, பாதங்களிலிருக்கும் இறந்த செல்களும் அழியும். இதன் மூலம் பாதங்களிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்க முடியும். இது தவிர, ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் இந்த மசாஜ் உதவுகிறது. மசாஜ் செய்யும் போது, நீரில் கலக்கப்படும் மாய்ச்சரைசர்களால் பாதம் மிகவும் மிருதுவாகும்.

பாதத்திற்கு மசாஜ் செய்யும் போது, மனதிற்கு மிகவும் ரிலாக்சாக இருக்கும். ஏனெனில், உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதத்தில் முடிவடைகின்றன. அதனால், பாதத்தில் மசாஜ் செய்யும்போது அது உடல் முழுவதற்கும் புத்துணர்ச்சியை தருகிறது. இது தவிர, வளர்ச்சி பெறாத நகங்கள், பாத வெடிப்புகள் மற்றும் கால் தடிப்பு போன்ற பிரச்னைக்கும் இந்த மசாஜ் தீர்வாக அமையும்.

அழகு நிலையங்களில் செய்யப் படும் மசாஜின்போது, எண்ணெய்கள் பயன் படுத்தப்படுவதால் அது தளர்ந்து போன உடல் தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

பாதங்கள் தடிப்பால் அவதிப்படுவோர் படுக்கப் போகுமுன் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள், ரோஸ்மேரி எண்ணெய் கலந்த இளஞ்சூடான நீரில் வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வைத்தால், பாதங்களின் தடிப்பால் ஏற்படும் வலி காணாமல் போய்விடும். கால் தடிப்பு மிகவும் காய்ந்து போயிருந்தால், கடல் உப்பைக் கொண்டு அந்த பகுதியை தேய்க்க வேண்டும்.

அதன் பிறகு, படிகாரக் கல் கொண்டு தேய்க்கவேண்டும். பிறகு, வாசலின் தடவி அப்படியே விட்டுவிடவேண்டும். 25 கிராம் வாசலினுடன் ரோஸ்மேரி எண்ணெயும், சந்தன எண்ணெயும் சில சொட்டுகள் சேர்த்து தேய்த்தால் பாதம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

கால் தடிப்புகள் மிகவும் முற்றிய நிலையில் இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது. அழகுக் கலை நிபுணர்களிடம் சென்றால் பலனளிக்காது.

பாதங்களை பராமரிக்க சில "டிப்ஸ்'கள்

* பாத நகங்களில் பூசும் நகப் பூச்சுகளை நீண்ட காலம் தொடர்ந்து அப்படியே விட்டு விடாதீர்கள். அப்படி விட்டால் நகங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நகத்தின் இயற்கை நிறமும் போய்விடும். அவ்வப்போது, நகப் பூச்சுகளை ரிமூவர் கொண்டு எடுத்து விடுங்கள்.

* தினமும் குளிக்கும் போது, இளஞ்சூடான நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்கலாம்.

* மசாஜ் செய்யும் போது, பாத விரல்களுக்கு இடையில் மாய்ச்சரைசிங் கிரீம் கொண்டு தேய்த்து அதன் பிறகு பாதம் முழுவதும் தேய்த்தால் மிகவும் இதமாக இருக்கும்.

* குளிர்ச்சியான ஜெல் கொண்டு மசாஜ் செய்தால், தளர்ந்து போன தசைகளுக்கு புத்துணர்ச்சி தரும்.

* கால்களைப் போலவே கைகள் பராமரிப்பும் மிகவும் முக்கியம். ஏனெனில், சலவை சோப் போன்ற தோலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை நாம் கைகளை கொண்டுதான் பயன்படுத்துகிறோம். சீதோஷ்ண நிலை மாற்றங்களும் கைகளை வெகுவாக பாதிக் கின்றன. உடலில் மற்ற பகுதிகளில் உள்ள தோலை விட, கைகளின் மேல்தோல் முதிர்ச்சி அடைந்தது போன்ற தோற்றத்தை தரும். பாதங்களைப் போல கைகளிலும் எண்ணெய்ச் சுரப்பிகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, கைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். தினமும், நல்ல மாய்ச்சரைசர் கிரீம் ஒன்றை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் வேலை செய்யும் போது கையுறைகளை அணிந்து கொள் ளலாம். தொடர்ந்து கைகளுக்கு மசாஜ் செய்து வந்தால், தளர்ந்த தோல் புத்துணர்ச்சி அடையும். காய்ந்து போன நகங்கள் அழகாகும். மேல்தோலில் வலி இருந்தால் குணமாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner