Ads Header

Pages


05 May 2012

வேலை வாய்ப்புக்கு சில வழிகாட்டும் குறிப்புக்கள்!

சுஜிதா, ப்ளஸ்டூ எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறாள். அவள் முகத்தில் இருந்த சோகம், அவளது தோழி அருணாவை திடுக்கிட வைத்தது.

‘‘நீதான் கிளாஸ் ஃபர்ஸ்ட் வர்றவளாச்சே சுஜி... ஏன் ரிசல்ட்டைப் பத்தி இவ்வளவு கவலைப்படற?’’

‘‘எனக்கு ரிசல்ட் பத்தி கவலை இல்லே. மேலே படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலை வீட்டிலே இருக்கு. நல்ல மார்க் வாங்கிட்டு காலேஜ் போக முடியாதேங்கிற வருத்தம்தான்! ப்ளஸ்டூ படிச்சவளுக்கு எங்கே நல்ல வேலை கிடைக்கும்?’’

‘‘கவலைப்படாதே, சுஜி! நிச்சயமா உன்னோட நாலெட்ஜுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். வேலையைப் பார்த்துட்டேக்கூட நீ படிப்பைத் தொடரலாம்’’ என்றாள் அருணா.

அருணா சொன்ன வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கிறார், ‘ஸ்கோப்’ இண்டர்நேஷனலின் மனிதவள மேம்பாடு (பிஸி) எக்ஸிக்யூடிவ் வைஸ் பிரஸிடெண்ட், சந்திரசேகர் பிங்காலி. தனது கம்பெனியின் பெயரிலேயே ‘வாய்ப்பை’ வைத்திருக்கும் ‘ஸ்கோப்’ எந்த விதமான வாய்ப்புகளை வழங்குகிறது?

ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் ஒரு பகுதிதான் எங்களது ஸ்கோப் இண்டர்நேஷனல். இங்கே, ஐ.டி. ப்ரொடக்ஷன் (சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட்), ஐ.டி. மெயின்டெனன்ஸ் (பராமரிப்பு), ஐ.டி. சப்போர்ட் சென்டர், ஹோல்சேல் மற்றும் கன்ஸ்யூமர் பாங்கிங், மனிதவள மேம்பாடு, நிதித்துறை (ஃபினான்ஸ்) ஆகிய ஏழு வித்தியாசமான துறைகளைக் கொண்டது எங்கள் நிறுவனம்.

அதனால் எந்த விதமான படிப்புப் படித்திருந்தாலும் எங்களால் வேலை வாய்ப்புக் கொடுக்க முடியும்.

இவர்களது ஸ்கோப் இண்டர்நேஷனல் கால் சென்டரா?

‘ஸ்கோப்’ கால் சென்டர் இல்லை. நாங்கள் இதை ஷேர்ட் சர்வீஸ் சென்டர்’ (ஷிலீணீக்ஷீமீபீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ சிமீஸீtக்ஷீமீ) என்று சொல்லுவோம். ஏனென்றால், பல்வேறு துறைகளுக்கு, சப்போர்டிவான வேலைகளை நிறைய விதமான தொடர்புகள் மூலம் செய்து கொடுக்கிறோம்.

ஸ்கோப்பில் எந்தத் தகுதி அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள்?

ப்ளஸ் டூ முதல் இன்ஜினீயரிங், சி.ஏ., போஸ்ட் கிராஜுவேட் என்று எந்தத் துறை படிப்பாக இருந்தாலும், ஸ்கோப்பிற்கு வரலாம். குறிப்பாக, ப்ளஸ்டூ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்து, அவர்களைப் பட்டதாரிகளாக மாற்றுகிறோம். அவர்களுக்கு, தகுதியும், திறமையும் இருந்தால், அவர்களுக்கு அதற்கு மேலேயும் படிப்பதற்கான வசதிகளைச் செய்து தருகிறோம். அவர்களது படிப்பும், அனுபவமும் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கேற்றாற் போல் அவர்களது பதவியும், சம்பளமும் உயர்ந்து கொண்டே இருக்கும்.

ஸ்கோப்பின் சம்பளம் எந்த வகையில் ஈர்க்கிறது?

ப்ளஸ் டூ முடித்த, அனுபவம் இல்லாதவர்களுக்கே ரூ.7,000/_லிருந்து சம்பளத்தை ஆரம்பிக்கிறோம். மற்றவர்களுக்கு, மார்க்கெட் சர்வே எடுத்து எங்களைப் போன்ற கம்பெனிகள் எவ்வளவு கொடுக்கிறார்களோ, அதைப்போல் நாங்களும் ஃபிக்ஸ் செய்கிறோம். ஆனால் ஸ்கோப்பிற்கு, ஒருவர் மிகவும் தேவையானவர் எனில், தகுதியும், அனுபவமும் அதிகமென்றால் மார்க்கெட்டில் இருப்பதைவிட மிக அதிகமாகவே கொடுப்போம்.

இங்கே வேலையில் சேர வயது வரம்பு என்ன?

வயது வரம்பு இல்லை என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் ஸ்பெஷாலிடியே 18 வயதிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்கிறோம். சமீபத்தில், பாங்கிங்கில் 25 வருட அனுபவமுள்ள, 62 வயதான ஒருவரைத் தேர்வு செய்தோம். அதனால் வயது அதிகம் என்பது ஸ்கோப்பைப் பொறுத்தவரை ஒரு தகுதிக் குறைவு இல்லை.

ஸ்கோப்பில் ‘கேரியர் க்ரோத்’ என்கிற பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை எப்படி கொடுக்கிறார்கள்?

‘கேரியர் க்ரோத்’தை மிகவும் கவனத்துடன் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். வேலை செய்பவர்களின் திறமையைக் கண்டு பிடித்து, பதவி உயர்வு, சம்பளம் எல்லாவற்றையும் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு தருகிறோம். மேலும் வெளிநாடு போக விருப்பமுள்ளவர்களுக்கு, 56 நாடுகளில் உள்ள எங்கள் கிளைகளில் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். கடந்த வருடம் மட்டுமே 64 பேருக்கு வெளிநாடுகளில் நிரந்தர வேலையே கொடுத்திருக்கிறோம்.

பொதுவாகவே பீ.பி.ஓ., சாஃப்ட்வேர் கம்பெனிகளில், வேலையிலிருந்து ரிலாக்ஸ் செய்ய வாய்ப்புகள் இருக்கும். ஸ்கோப்பில் எந்த விதமாக ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளலாம்?

ஸ்கோப்பில், என்கேஜ்மெண்ட் மேனேஜர் என்ற ஒருவர் தனியாகவே இருக்கிறார். ஸ்கோப்பில் பணி புரிபவர்கள் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சமீபத்தில்கூட, அனுஹாசன், பாஸ்கி ஆகியோரை வரவழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். பொழுது போக்க, புதியவைகளைக் கற்றுக் கொள்ள என்று இதுபோல பல வாய்ப்புகள் இங்கே உண்டு.

பீ.பி.ஓ.க்களில் வேலைச் சுமை, அதிக நேரம் வேலை இருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. ஸ்கோபில் எப்படிப்பட்ட வேலைச்சூழல் இருக்கிறது?

இது பொதுவான கருத்துதானே தவிர, உண்மை இல்லை. ஸ்கோப்பைப் பொறுத்தவரை வாரத்தில் 5 நாட்கள் வேலை. இதில் முக்கியமான விஷயம், குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட வேலையை முடிப்பவர்களுக்கு ‘ஸ்மார்ட் ஒர்க்_ஸ்மார்ட் ரிவார்டு’ என்றும் கொடுக்கிறோம். அதிக நேரம் வேலை செய்வது என்பது எங்களைப் பொறுத்தவரை திறமைக் குறைவுதான். அதனால் வேலை நேரம் அதிகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

திறமைக்கேற்ற வேலை அதற்கேற்ற சம்பளம் என்று இன்றைய இளைஞர்கள் கனவு நனவாகும் சூழல் ஸ்கோப்பில் இருப்பது இளைய சமுதாயத்தை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner