Ads Header

Pages


13 May 2012

தினம் ஒரு விளாம்பழம்! பாட்டி வைத்தியம்!

பாட்டி வைத்தியம்

தினம் ஒரு விளாம்பழம்னு 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தா,
பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகறதோட,
உடம்புல புதுரத்தம் ஊத்தெடுக்கும்!

இந்தக் காலத்து குழந்தைங்க பூஸ்ட், போர்ன்விட்டானு குடிச்சு வளர்ந்தாலும், எப்போ வேலைக்குப் போக ஆரம்பிக் கறாங்களோ... அப்பவே அடிக் கொருதரம் காபி, டீ குடிக்கற பழக்கம் ஆரம்பிச்சுடுது! விளைவு & சின்ன வயசுலயே பித்தம் தலைக்கேறி தலை நரைச்சுடுது.

பித்தம் ஜாஸ்தியானா, வாய் கசந்து சாப்பாடு பிடிக்காம போயிடும். உடம்புக்குத் தேவையான ஊட்டம் இல்லேன்னா, சலிப்பு மனப்பான்மை தானாவே வந்துடும்.

இதுக்கு அருமையான ஒரு மருந்து என்ன தெரியுமா? தினம் ஒரு விளாம்பழத்தை பச்சடி பண்ணி சாப்பிடறதுதான்!

விளாம்பழ சதைப் பகுதியில, வெல்லம் போட்டு பிசைஞ்சு, கொஞ்சமா தண்ணி விட்டு அடுப்புல வச்சு, ஜாம் மாதிரி ஆனதும் இறக்கிடுங்க. விருப்பப்பட்டா, ஒரு காய்ஞ்ச மிளகாயை தாளிச்சுக் கொட்டலாம். அவ்வளவுதான், விளாம்பழ பச்சடி ரெடி! இனிப்பும் புளிப்புமா வாய்க்கு அவ்ளோ ருசியா இருக்கும்.

பித்த சம்பந்தமான எல்லா வியாதியையும் குணப்படுத்தற மருத்துவத் தன்மை விளாம்பழத்துல இருக்கு! தினம் ஒரு பழம்னு 21 நாள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டா, பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகறதோட, உடம்புல புது ரத்தம் ஊத்தெடுக்கும்.

வளர்ற குழந்தைகளுக்கும் விளாம்பழம் ரொம்ப நல்லது. அப்பப்போ விளாம்பழத்தை அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ரெடி பண்ணிக் கொடுத்து, சாப்பிட வச்சா, உறுதியான எலும்புகள் அமையும்.. ஞாபக சக்தி அபாரமா இருக்கும்.. நோய்களும் சட்டுனு தாக்காது! வயசானவங்களுக்கு விளாம்பழ பச்சடியை சாப்பிடக் குடுங்க. அது ஒரு டானிக் மாதிரி செயல்படுறதால, அவங்க புதுத் தெம்போட உலா வருவாங்க. பற்கள் பலப்படும்.

அடை, தோசைக்குத் தொட்டுக் கிட்டு சாப்பிட, விளாம்பழ பச்சடி ஜோரான ஜோடி. செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner