இருபது வயதில் இடுப்பு பெருத்து போச்சு! : நீங்களும் அழகு ராணி தான்!
உடலின் வளர்சிதை மாற்றம் மிக வேகமாக நடைபெறும் காலம், 20 முதல் 24 வயது வரையிலான பருவம். சதை வளர்வதற்குரிய ஹார்மோன்கள் நன்கு சுரக்கும் காலம் என்பதால், கூடவே நல்ல உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இதைச் செய்யாமல் போகும்போது தான், செலவிடப்படாத சக்தி அனைத்தும் கொழுப்பு வடிவில், உடலில் தொடை, இடுப்பு மற்றும் பல உள்ளுறுப்புகளில் தங்கி விடுகிறது. எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு, தோலுக்கு, உடலுக்கு மிகவும் கெடுதல்.
ஓட்டப் பயிற்சி, நடை பயிற்சி, சைக்கிளிங் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை, தினமும் இரண்டு வேளையும் செய்து வந்தால் தான் அதிகப்படியான உடல் பருமன் குறையும். உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. ஆரோக்கியமான உணவு முறை அவசியம். உடலுக்கு தினமும் 1200 மி. கி., கால்சியம் சத்து தேவைப்படுகிறது. அது கிடைக்க வேண்டும். வைட்டமின், புரோட்டீன் சத்துக்கள் அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும்.
அதே நேரம், கெட்டித் தயிர், அளவுக்கு அதிகமான அரிசிச் சோறு, எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுப் பண்டங்கள், இரவு சாப்பிட்டு முடித்ததும் படுக்கை, வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத் தல் ஆகியவற்றுக்கு, கண்டிப் பாக, 100 சதவீதம் "தடா' போட வேண்டும். இந்த வயதில், மேக்அப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், மினுமினுப் புக்குத் தேவையான அனைத்து போஷாக்குகளும், சருமமே உற்பத்தி செய்து விடுகிறது. சிலருக்கு முகப் பரு ஏற்படும். அதற்குரிய சிகிச்சை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். வெயிலில் அலைய நேரிட்டால், கடலைமாவு, மஞ்சள் கலந்த கலவையை தேய்த்துக் குளித்து, சன் ஸ்கிரீன் லோஷன் பூசி வெளியில் கிளம்பலாம்.

0 comments:
Post a Comment