1) செட்டிநாட்டு பூண்டு குழம்பு
தேவையானவை :
பூண்டு - 12 பல்
சின்னவெங்காயம் - 20
தக்காளி - 1 பெரியது
கரிவேப்பிலை - 5
புளி - 1 எலுமிச்சியளவு
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூண்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூண்
மிளகாய்பொடி - 1 டீஸ்பூண்
உழுந்து - 1 டீஸ்பூண்
கடுகு - 1 டீஸ்பூண்
தேங்காய்பால் - 2 டேபில் ஸ்பூண்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தேவையானவை
மல்லி - 2 டேபிள்ஸ்பூண்
ஜீரகம் - 1 டீஸ்பூண்
கசகசா(வெள்ளை) - 1 டீஸ்பூண்
மிளகு - 1/4 டீஸ்பூண்
காய்ந்தமிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
எண்ணெய் - 1 டீஸ்பூண்
அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூண் எண்ணெய் ஊற்றி தேவையானவை 2 ல் உள்ளவற்றை தனி தனியாக வறுத்து அதை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து வைக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டு(நீளவாக்கில்), தக்காளி நறுக்கி கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூண் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
பின்னர் பூண்டு போட்டு சிறிது வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,காயம் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.தேங்காய் பால் சேர்த்து 1 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்து வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
அருமையான செட்டிநாடு பூண்டுகுழம்பு ரெடி
2) சுவையான பூண்டு குழம்பு
இந்த குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். இதனை எளிதில் செய்து விடலாம். இதை அனைத்து வகை சாதத்துடனும், அனைத்து வகை பலகாரத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். வாயு தொல்லை, ஜீரணம் ஆகாதவர்களுக்கு ஏற்ற குழம்பு. வாரத்தில் ஒரு முறை வைத்து சாப்பிடலாம். இதையும் என் அன்பு அம்மா தான் கற்றுக்கொடுத்தது. எனக்கு மிகவும பிடித்த குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள் : -
பூண்டு - 1கப்
சின்ன வெங்காயம் - 1/2கப்
தக்காளி - 1கப் பொடியாக நறுக்கியது
புளித் தண்ணீர் - 1/2கப்
தேங்காய் துருவல் - 1/2கப்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 2ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
வெந்தயம் - 1ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4ஸ்பூன்
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
தனியா தூள் - 3ஸ்பூன்
மஞ்சள் துள் - 1/4ஸ்பூன்
கடுகு, உளுந்தப்பருப்பு - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி தழை - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
பூண்டையும் வெங்காயத்தையும் தோல் உரித்து நன்கு கழுவி தனியே வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், சீரகம், சோம்பு, மிளகு, 2பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைப்போல் அரைக்கவும். பின்பு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உரித்த பூண்டையும் வெங்காயத்தையும் சேர்த்து பொன் நிறமாக வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும்.
நன்கு வதக்கிய பின்பு வறுத்த பூண்டையும், வெங்காயத்தையும் அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கி புளித்தண்ணீர், அரைத்த மசாலா, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன் அதை கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழைகளை தூவவும். தேவையான பொழுது லேசாக சுட வைத்து பரிமாறவும்.
சுவையான பூண்டு குழம்பு தயார்.

0 comments:
Post a Comment