Ads Header

Pages


15 March 2012

முப்பருப்பு முறுக்கு--தயிர் சீடை---மசாலா தட்டை வாசுகிகள் கைமணம் !

வாசுகிகள் கைமணம்

முப்பருப்பு முறுக்கு

தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், உளுத்தம்-பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், பெருங்-காயத்தூள் - சிறிதளவு, பச்சரிசி - 2 கப், எள் - 6 டீஸ்பூன், வெண்-ணெய் - 3 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் களைந்து நீரை வடித்துவிடவும். பருப்பை உலர வைத்து, கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பையும் உளுத்தம் பருப்பையும் வெறும் கடாயில் வறுக்கவும். அரிசியைத் தண் ணீரில் களைந்து, உலர வைத்து, லேசாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த அரிசி, பருப்பு வகைகளை ஆற வைத்து மாவாக்கிக் கொள்ளவும். இதனுடன் உப்பு, எள், வெண்ணெய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும், கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு அச்சின் உட்புறம் சிறிது எண்ணெய் தடவி, அதில் மாவைப் போட்டுப் பிழிந்து, பொரித்தெடுக்கவும்.

--------------------------------------------------------------------------------

தயிர் சீடை


தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், தயிர் - கால் கப், சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்-பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் கை பொறுக்கும் சூட்டில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன், தேங்காய் துருவல், வெண்ணெய், பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து தயிர் விட்டுக் கலந்து, தண்ணீர் விட்டு உருட்டும் பதத்தில் பிசையவும். சீடைகளாக உருட்டி உலர்ந்த துணியில் போடவும். பிறகு அரை மணி நேரம் கழித்து, (ஈரப்பதம் போனதும்) எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

-------------------------------------------------------------------------------


மசாலா தட்டை

தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியைத் தண்ணீரில் களைந்து, நிழலில் உலர வைத்து அரைத்த மாவு) - 2 கப், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் கை பொறுக்கும் சூட்டில் வறுத்தெடுக் கவும். இதனுடன், தேங்காய் துருவல், வெண்ணெய், பெருங்காயத் தூள், எள், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். பிறகு, தண்-ணீர் விட்டு தட்டை-களாக செய்து காய்ந்த துணி-யில் போடவும். அரை மணி நேரம் கழித்து, (ஈரப்பதம் போனதும்) எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner