தேங்காய்ப் பால் வெஜ் சூப்

செய்முறை: காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்து, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். பாதாம்பருப்புத் தூளுடன் சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் வெந்த காய்கறிகள், வேக வைத்து வடிகட்டிய தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி தேங்காய்ப் பாலை ஊற்றவும். கடாயில் நெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, சூப்பில் கொட்டவும்
-------------------------------------------------------------------------------------------------
கொத்தமல்லி சூப்
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
பூண்டு - அரை கப்
மிளகு 1 1/2 ஸ்பூண்
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - 1/2 ஸ்பூண்
செய்முறை:
கொத்தமல்லி, பூண்டு, மிளகு எல்லாவற்றையும் மைய அரைக்கவும். எண்ணெய் காய வைத்து பூண்டு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பரிமாறும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
0 comments:
Post a Comment