Ads Header

Pages


25 March 2012

மூலிகை குழம்பு - சமையல் குறிப்புகள்!

மூலிகை குழம்பு

தேவையானப் பொருட்கள்
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
வடகம் - அரை மேசைக்கரண்டி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 13 பல்
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மா இலை கொழுந்து - 7
வெற்றிலை - 5
மனத்ததக்காளி இலை - 25 நம்பர்
உப்பு - அரை தேக்கரண்டி

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். புளியுடன் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து கரைத்து கால் கப் அளவு திக்கான புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

மா இலை, வெற்றிலை மற்றும் மணத்ததக்காளி இலை மூன்றையும் சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொடி வகைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு போட்டு வதக்கி விட்டு நறுக்கின சின்ன வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி துண்டுகள் மற்றும் பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.

முதலில் ஆற வைத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மா இலையும், வெற்றிலையும் சேர்த்து மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வடகம், பச்சை மிளகாய், மணத்ததக்காளி இலை போட்டு வதக்கவும். அதில் அரைத்த வெங்காய தக்காளி விழுதை போடவும்.

பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் போட்டு புளி கரைசலை ஊற்றவும்.

புளி கரைசல் ஊற்றிய பிறகு 3 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். அதன் பின்னர் 4 நிமிடம் மூடி வைக்கவும்.

4 நிமிடம் கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கலக்கி மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

அரைத்து வைத்திருக்கும் மா இலை, வெற்றிலை விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

10 நிமிடம் கழித்து இறக்குவதற்கு முன் மா இலை சாறை ஊற்றி கலக்கி விட்டு மூடி வைத்து 3 நிமிடம் கழித்து இறக்கவும்.

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த மூலிகை குழம்பு தயார். வாரத்தில் ஒரு முறை இந்த மூலிகை குழம்பை செய்து சாப்பிட்டால் நம் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner