பிரசன்னா, சினேகா காதல் ஜோடியின் திருமணம் வருகிற மே 11ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்பில் இருந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக வலம் வர தொடங்கினர். விரைவில் திருமணம் தேதியை அறிவிக்கிறோம் என்று இருவரும் கூறி வந்தனர். இதனிடையே சமீபத்தில் இருவரது வீட்டாரும் சந்தித்து திருமணம் தேதியை முடிவு செய்து இருக்கின்றனர். அதன்படி சினேகா-பிரசன்னா திருமணம் வருகிற மே-11ம் தேதி, சென்னையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் விமரிசையாக நடக்க இருக்கிறது.

13 March 2012
பிரசன்னா, சினேகா திருமண தேதி அறிவிப்பு!

0 comments:
Post a Comment