Ads Header

Pages


25 March 2012

ஆட்டுகால் குருமா--நுரையீரல் சால்னா - சமையல் குறிப்புகள்!

தேவையான பொருட்கள்
ஆட்டுகால் - ஒன்று முழுசு
வெங்காயம் - ஐந்து
தக்காளி - மூன்று
பச்சமிளகாய் - ஐந்து
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - அரை முறி
முந்திரி - ஆறு
கச கசா - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி - ஒரு கொத்து
புதினா - பத்து இதழ்
எண்ணை - முன்று மேசக்கரண்டி
டால்டா - அரை தேகரண்டி வாசனைக்கு
பட்டை - பெரியது ஒன்று
கிரம்பு - மூன்று
ஏலம் - இரன்டு

செய்முறை
முதலில் ஆட்டு காலை சுத்தம் செய்து கழுவவும். வினிகரில் ஊறவைத்து அதில் ஊள்ள் முடி, அழுக்கு எல்லாம் எஅல்ல தேய்த்து கட்டிங் போர்டி கூட வைத்து தேய்க்கலாம்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு,சிறிது உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் கால் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
அது வெகுவதறுற்குள். குருமா தாளித்து விடலாம்.
தனியாக சட்டியை காயவைத்து ஒரு பெரிய பட்டை, இரண்டு ஏலம்,கிரம்பு மூன்று போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும் நிரம் மாறியதும், ஐந்து தேக்கரண்டி இஞ்சி பூன்டு பேஸ்ட் போட்டு வத்க்கவும் இரண்டு நிமிடம் சிம்மில் விடவும்.
பிறகு பாதி கொத்துமல்லி புத்னா போட்டு வதக்கி தக்காளியை அரிந்து போட்டு பசமிளகாயை ஒடித்துபோட்டு தீயை குறைத்து வைத்து தக்களியை வேகவிடவும்.
தக்காளி வெந்ததும் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து தயிரையும் நல்ல அடித்து ஊற்றவும்.
இப்போது வெந்த காலை சேர்க்கவும். சேர்த்து கொதிக்கவிட்டு தேங்காய், முந்திரி ,கச கச முன்றையும் பட்டு போல் அரைத்து ஊற்றவும்.
சுவையான கால் குருமா ரெடி.


குறிப்பு:
ரொட்டி,தோசை, இட்லி,ஆப்பம்,இடியாப்பம் போன்றவைகளுக்கு ஏற்றது.
---------------------------------------------------------------------------------------
நுரையீரல் சால்னா

தேவையான பொருட்கள்
ஆட்டு நுரை - ஒன்று
வெங்காயம் - மூன்று
தக்காளி - ஐந்து
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியா தூள் - நான்கு தேக்கரண்டி
பச்சமிளகாய் - முன்று
உப்பு - உப்பு - தே.அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தாளிக்க
-------
எண்ணை - மூன்று தேக்கரண்டி
டால்டா - ஒரு தேக்கரண்டி
பட்டை - இரண்டு பெரிய துண்டு
கிராம்பு - முன்று
ஏலம் - ஒன்று
வெங்காயம் - அரை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
தேங்காய் - ஒரு சிறிய முறி
கத்திரிக்காய் - அரை கிலோ

செய்முறை
நுரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் மிளகாய் தூள்,தனியாத்தூள்,மஞ்சள் தூள்,உப்பு, பச்ச மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மூன்று தேக்கரண்டி வெங்காயம், தக்காளி நீளமாக அரிந்தது போட்டு வெறவி வைக்கவும்.
சட்டியில் எண்ணியை காய வைத்து பட்டை,கிராம்பு,ஏலம் போட்டு வெடித்ததும் அரை வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்து மல்லி புதினா போட்டு தாளித்து வெறவி வைத்துள்ல நுரைமசாலாவைபோட்டு கிளறி ஐந்து நிமிடம் வதைக்கி குக்கரில் முன்று விசில் விட்டு வேகாவைக்கவும்.
வெந்ததும் கத்திரிகாயை நான்காக அரிந்து போட்டு தேங்காயை அரைத்து ஊற்றி இரக்கவும்.

குறிப்பு:
இதற்கு கத்திரிக்காய் போட்டு செய்தால் தான் நல்ல இருக்கும்.கேரட்டும் சேர்க்கலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner