Ads Header

Pages


11 March 2012

அரவான் - சரியான நேரத்தில் வெளியான மிகச்சிறந்த திரைப்படம்!

பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வெளியாகி இருக்கும் ஒரு திரைப்படம் அரவான் ஆகும். அப்படத்தின் திரைப்பார்வையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
படத்தோட கதை என்ன? பசுபதி களவாணி கிராமத்துல உள்ள ஒரு களவாணி.. அவர் அசலூர்ல போய் களவாண்டு வர்றதுதான் அந்த கிராமத்து மக்களுக்குப் படி அளக்குற அரிசி.. அவர் மதிப்பு மிக்க நகைகளை கொள்ளை அடிச்சு வந்தாலும் ரொம்ப கம்மி விலைக்கு அதை எடுத்துக்கிட்டு பண்டமாற்றா கொஞ்சம் நெல் தர்றாங்க..
 
மகாராணியோட வைர நெக்லஸ் திருட்டு போயிடுது.. அதை கண்டு பிடிச்சுக்கொடுத்தா 6 மாசத்துக்கு உக்காந்து சாப்பிடற அளவு நெல் கிடைக்கும்னு சொல்றாங்க.. பசுபதி அதை தேடி போகையில் தான் ஹீரோ ஆதி சகவாசம் கிடைக்குது.. ஆதியும் ஒரு களவாணி தான்.. அவர் தான் அந்த நகையை களவாண்டவர்..
 
அந்த நகையை மகா ராணியிடம் ஒப்படைச்சு கிராம மக்களுக்கு நெல் வாங்கி தர்றாரு பசுபதி.. ஆதி பசுபதி கூடவே கூட்டு சேர்ந்துடறார்..
 
ஆதி ஆரம்பத்துல தன்னை அநாதைன்னு சொல்லிக்கறார்.. ஆனா ஒரு கட்டத்துல அவருக்கு குடும்பம் இருக்கு.. அவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதின்னு தெரிய வருது.. இடை வேளை..
 
ஃபிளாஸ் பேக் கதை.. ஆதியோட ஊர்ல யாரோ ஒரு டெட் பாடியை கொண்டு வந்து போட்டுடறாங்க.. அசலூர்க்காரனோட டெட் பாடியை அடையாளம் கண்டுக்க அக்கம் பக்கம் ஊர்க்கெல்லாம் ஆள் அனுப்பி காட்டறாங்க/.. அந்த டெட் பாடி பரத்.. அவரோட அண்ணன்க்கும் ஆதியோட ஊர்க்கும் ஆல்ரெடி தகறாரு.. இரண்டு ஊர்க்கும் பயங்கர கை கலப்பு வர்ற சூழல்.. பரத்தோட அண்ணன் வேணும்னே என் தம்பியை ஊர் மக்கள் கூடி கொன்னுட்டீங்கன்னு சொல்றார்.. பழிக்கு பழி எடுக்கனும்கறார்.
ராஜா ( கதை நடக்கற கால கட்டம் 18ஆம் நூற்றாண்டு) என்ன தீர்ப்பு சொல்றார்ன்னா ஆனது ஆகிடுச்சு.. ஆதியோட ஊர்க்காரங்க இறந்து போன பரத்க்கு ஈடாக அதே வயசுள்ள ஒரு இளைஞனை பலி கொடுக்கனும்கறார்.
 
5 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அதுல இருந்து ஆதியை பலி ஆள் ஆக்க முடிவு பண்றாங்க.. ஆதிக்கும், ஹீரோயினுக்கும் ஆல்ரெடி லவ்,.,. பலி ஆக இன்னும் 30 நாள் டைம் இருக்கு.. அதுக்குள்ள மேரேஜ் பண்ணி அட்லீஸ்ட் 30 நாளாவது. வாழ்ந்திடனும்னு நினைக்கறாங்க.. மேரேஜ் ஆகுது..
இனிமே கதை பி கே பி நாவல் மாதிரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன்ல போகுது.. ஆதி உண்மையான கொலையாளீயை தேடி போறார்.. பரத்தும், அஞ்சலியும் லவ்வர்ஸ்.. அது அஞ்சலியோட அப்பாவுக்கு பிடிக்கலை.. அவர் கொன்னிருப்பாரா?ன்னு பார்த்தா அவர் இல்லை..
தொடர்ந்த விசாரணைல பரத் அரண்மனைக்கு போனது தெரிய வருது.. வாசனைத்திரவியம் விற்கும் வியாபாரியா போய் சின்ன மகாராணியை சந்திச்சிருக்கார்.. சின்ன மகாராணிக்கு மன்னர்  மேல ஆல்ரெடி செம காண்டு.. அதாவது அவரது காதலனை முடிச்சுட்டு பலவந்தமா கூட்டிட்டு வந்தாரு.. ஆனாலும் கில்மா நடக்கலை..
 மகாராணி மன்னரை   பழி வாங்க பரத் கூட கில்மா பண்ணிடறார்.. இந்த மேட்டர் மன்னனுக்கு தெரிய வருது.. அவர் தானே போய் பரத்தை கொலை செஞ்சுடறார்..
 
இந்த மேட்டர் தெரிஞ்சதும் ஆதி மன்னரை கட்டி கூட்டிட்டு வர்ற வழில ஒரு விபத்து.. அருவில குதிச்சு மன்னர் தற்கொலை.. ஆதிக்கு கால்ல அடிபட்டு நடக்க முடியாத சூழல்..
 
பலி ஆள் தேடி ஆள் வந்தாச்சு , ஆனா பலி ஆள் காணோம்.. அதனால ஆல்டர்ந்நேட்டிவ்வா வேற ஒரு ஆளை பலி குடுக்கறாங்க..
 
ஆதி கிராமம் வர்றார்.. உண்மை தெரிஞ்சதும் ஆதியோட மாமனார் நடந்தது நடந்துடுச்சு நீங்க 10 வருஷங்கள் எங்காவது தலைமறைவா இருங்க.. கிராம வ்ழக்கப்படி 10 வருஷம் கழிச்சு பலி ஆள் வந்தா மன்னிச்சுடுவாங்க அப்டிங்கறார்..
 
அதுக்காகத்தான் ஆதி தலை மறைவா வாழ்றார்.. ஃபிளாஸ் பேக் முடியுது..
 
ஆனா 9 வது வருஷத்துலயே ஆதியை கண்டு பிடிச்சிடறாங்க.. என்ன நடக்குது? அப்டிங்கறதை மனதைத்தொடும் விதத்தில் படமாக்கி இருக்காங்க.
 
படத்தில் முதல்ல பாராட்ட வேண்டியது ஆர்ட் டைரக்‌ஷன்.. 18 ஆம் நூற்றாண்டு மனிதர்களீன் ஆடை, அணிகலன்கள், வீடு எல்லாம் நேர்த்தி.
 
இசை புது முகம் என்பது நம்ப முடியவில்லை.. செம 4 பாடல்கள் எல்லாமே கேட்கற மாதிரி இருக்கு..
 
ஒளிப்பதிவு அருமை.. களவு செய்ய ஆட்கள் போறப்ப கூடவே நாமும் போற மாதிரி ஃபீலிங்க்..
 
நடிப்பு செக்‌ஷன்ல ஆதி முதல் இடம்.. சிக்ஸ் பேக் பாடி.. அசால்ட்டான நடிப்பு.. என மனிதர் கலக்கிட்டார்.. ஆல்ரெடி மிருகம், ஈரம்ல கலக்கினவர் தானே?
 
பசுபதி சொல்லவே வேணாம்.. வெயில் அளவு சான்ஸ் இல்லைன்னாலும் இடைவேளை வரை இவர் தான் ஹீரோவா? என்று கேட்கும் அளவு பின்னிட்டார்..
 
ஹீரோயின் தன்ஷிகா உடல் வாகு, கண்கள், பார்வை என மனதில் தங்கும் பெண்னாகிறார்.. நல்ல எதிர்காலம் உண்டு.
 
சீரியசான கதையில் சிங்கம்புலியின் கொளுந்தியா , மச்சினி காமெடி கலகலப்பான பார்ட்.

1 comments:

கிஷோகர் said...

அருமையான விமர்சனம். இன்னமும் பாக்க குடுத்து வைக்கல. எனக்கு வசந்த பாலனை ரொம்ப பிடிக்கும்.

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner