Ads Header

Pages


30 March 2012

முள்ளு தேன் குழல், சுவையான அதிரசம் சமையல் குறிப்புகள் !

======================================================================
நான் செய்யும் முள்ளு தேன் குழல், ப்ளைன் தேன் குழல் இரண்டுமே கடினமாக இருக்கிறது. வாயில் போட்டதும் கரையும் படியாக முள்ளுத் தேன்குழல் எப்படி செய்வது?

பச்சரிசி_1 கிலோ, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு_தலா 150 கிராம், வெண்ணெய் ¼ கிலோ, பெருங்காயம், உப்பு, சீரகம், எண்ணெய்_தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து காய வைத்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவில் பயத்தம் பருப்பு மாவு, உப்பு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய் போட்டுப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மாவை முள்ளு தேன் குழல் அச்சில் போட்டுப் பிழியவும். இந்த முள்ளு தேன் குழல் வாயில் போட்டதும் கரகரவென்று கரைந்து போகும்.

ப்ளைன் தேன்குழல் செய்ய பச்சரிசி_1 கிலோ,உளுந்து, வெண்ணெய்_தலா ரு கிலோ, பெருங்காயம், உப்பு, சீரகம்_சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து உலர்த்தி மிஷினில் அரைத்துக் கொள்ளவும். உளுந்தை பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து ப்ளைன் தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் திருப்பி விட்டு எடுக்கவும்.
======================================================================
சட்டென்று சுட்டுச் சாப்பிடும்படி சுவையான அதிரசம் செய்ய, பாகு எப்படி எடுப்பது?



பச்சரிசி மாவு ½ கிலோ, பொடித்த வெல்லம்_300 கிராம், ஏலக்காய்ப் பொடி_சிறிதளவு, எண்ணெய்_தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டிப் பாகு எடுத்துக் கொள்ளவும். வெல்லப்பாகை தண்ணீரில் விட்டு திரட்டினால் உருண்டு வரும்போது, எடுத்து தட்டில் போட்டால் ‘டங்’கென்று சத்தம் வர வேண்டும். அதுதான் அதிரசப் பாகின் பக்குவம்.

ஒரு பேசினில் மாவை எடுத்துக் கொண்டு, வெல்லப் பாகை கொஞ்சங் கொஞ்சமாக விட்டுக் கிளற வேண்டும். நன்கு கிளறியதும் அரை மணி நேரம் கழித்து, மாவை சின்ன அப்பள சைஸில் தட்டி எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்கவும். எத்தனை சாப்பிட்டாலும் சாப்பிடும் ஆசை அடங்காது!
====================================================================

மோர்க்கூழ் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு_1 கப், கடுகு, உளுந்து_தலா 1 டீஸ்பூன், புளித்த தயிர்_3 கப், மோர் மிளகாய்_5, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு_சிறிதளவு.

செய்முறை:

அரிசி மாவில் உப்பு, தயிர், பெருங்காயம் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மோர் மிளகாய் போட்டுத் தாளித்து கரைத்த மாவை கொட்டிக் கிண்டவும். கடாயில் ஒட்டாமல் வரும்போது கிளறி இறக்கவும்.

குறிப்பு : மாவு வெந்திருக்கிறதா என்று பார்க்க, மாவை கையில் எடுத்து உருட்டினால் மாவு கையில் ஒட்டக் கூடாது. இதுதான் பக்குவம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner