Ads Header

Pages


17 March 2012

ஜீரணப் பொடி - ஜாங்கி ரி ட்ராப்ஸ் - பட்டாணி ஸ்டஃப்டு பூரி வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்
ஜீரணப் பொடி

தேவையானவை:
1) கடலைப்பருப்பு - 2 கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், துவரம்பருப்பு - கால் கப், கோதுமை, அரிசி - தலா 2 கைப்பிடி.

2) மிளகு, தனியா - தலா கால் கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: முதலில் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, பொடித்துக் கொள்ளவும். இரண்டாவதாக கொடுத்துள்ளவற்றைத் தனித்தனியாக எண்ணெயில் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். இந்த இரண்டு பொடிகளையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

சாதத்துடன் இந்தப் பொடியைப் போட்டு கலந்து, நல்லெண்ணெய் விட்டு சாப்பிட, நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
ஜீரணப் பொடி: சுண்டைக்காயை நன்றாக வறுத்து சேர்த்துச் செய்தால் அருமையாக இருக்கும்
------------------------------------------------------------------------------------

ஜாங்கிரி ட்ராப்ஸ்

தேவையானவை: முழு உளுத்தம்பருப்பு - அரை கப், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை கிலோ, ரோஸ் எசன்ஸ், லெமன் கலர், ட்ரை ஃப்ரூட்ஸ் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: உளுத்தம்பருப்பு, பச்சரிசியை பதினைந்து நிமிடம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து, மெதுவடைக்கு அரைப்பதுபோல் அரைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து, லேசாக பிசுக்கு தட்டும் அளவுக்குக் கொதிக்க வைத்து (பாகு பதம் வேண்டாம்) எசன்ஸ், கலர் சேர்த்து இறக்கி, கொதிநீர் உள்ள அகலமான பாத்திரத்தின் நடுவில் சூடாகவே இருக்கும்படி வைக்கவும்.

ஒரு கொட்டாங்குச்சியை நன்றாக சுத்தம் செய்து, அதில் பெரிய துளை போட்டு, பாதி அளவு அரைத்த மாவை அதனுள் போடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அதன் மேல் இந்தக் கொட்டாங்குச்சியை மேலும் கீழும், பக்கவாட்டிலும் அசைத்தால் பெரிய துளிகளாக எண்ணெயில் விழுந்து பொரியும். அதைத் திருப்பிவிட்டு எடுத்து சர்க்கரை ஜீராவில் போடவும். ஊறியதும் எடுத்து வடிதட்டில் போட்டு, ஆறியதும் ட்ரை ஃப்ரூட்ஸ் கலந்து அகலமான கிண்ணத்தில் ஊற்றிப் பரிமாறவும்.

வாயில் போட்டதும் அமிர்தமாக இனிக்கும்.
ஜாங்கிரி ட்ராப்ஸ்: உளுத்தம்பருப்பு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், சிறிது மைதா மாவை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------

பட்டாணி ஸ்டஃப்டு பூரி


தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, உருளைக்கிழங்கு - 1, மைதா மாவு - 2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பட்டாணியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, லேசாக வேக வைத்து மசித்து, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து பட்டாணி விழுதுடன் சேர்த்து கரண்டியால் கலக்கவும். மைதா மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுப் பிசைந்து, சிறிய பூரிகளாக இட்டுக் கொள்ளவும். இதன் நடுவில் உருளை, பட்டாணி கலவையை வைத்து, இன்னொரு பூரியால் மூடி ஒட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
பட்டாணி ஸ்டஃப்டு பூரி: ஒரு டீஸ்பூன் நெய்யில் சிறிது கடலைமாவை வறுத்து, உருளை, பட்டாணி கலவையுடன் சேர்த்துச் செய்தால் சுவை நன்றாக இருக்கும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner