Ads Header

Pages


17 March 2012

கறி பிரட்டல் (சுலப முறை) -- மட்டன் நீலகிரி குருமா சமையல் குறிப்புகள்

கறி பிரட்டல் (சுலப முறை)

தேவையா பொருட்கள்
ஆட்டுக் கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
ஏலக்காய் , பட்டை, கிராம்பு - தலா 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மசாலாத் தூள் - 2 சிறிய ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மல்லி கீரை - பாதி கட்டு
எண்ணெய் - 5 அல்லது 6 ஸ்பூன்
தண்ணீர் - 200 மில்லி

செய்முறை
சுத்தம் செய்த ஆட்டுக்கறியோடு வெங்காயம், தக்காளியை வெட்டி போட்டு, பச்சை மிளகாயை கீறிவிட்டு போட்டு, மல்லி கீரை தவிர மற்ற அனைத்தையும் அத்துடன் போட்டு, எண்ணெய், தண்ணீர் ஊற்றி குக்கரில் 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
பிறகு கறி வெந்ததை உறுதி செய்துக் கோண்டு, மல்லி கீரையை நைஸாக அரிந்து போட்டு, தண்ணீர் இருந்தால் அது வற்றும் வரை அடுப்பில் வைத்து பிரட்டி எடுத்துவிடவேண்டும்.
இது மிக துரிதமாக செய்யக்கூடிய ஒரு கறிவகை.

பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
===================================================================


மட்டன்
நீலகிரி குருமா


தேவையான பொருட்கள்

மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
பட்டை - 2 கிராம்
இலவங்கம் - 2 கிராம்
ஏலக்காய் - 2 கிராம்
பச்சைமிளகாய் - 10 கிராம்
சோம்பு - 5 கிராம்
இஞ்சி - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 15 கிராம்
கொத்தமல்லி - 1 கட்டு
எண்ணை - 50 மில்லிலிட்டர்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

இஞ்சி, பூண்டு, வெங்காயம் அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய், பச்சைமிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

மட்டனை தயிரில் ஊற வைக்கவும்.

எண்ணையை சூடு செய்து கறி மசாலா போட்டு நன்கு வதக்கவும். மட்டனுடன் அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.

சுவையை சரி பாருங்கள். மஞ்சள்தூள், சாட் மசாலா, கறி மசாலா போடவும்.

நறுக்கிய கொத்தமல்லியுடன் அலங்கரிக்கவும்.

சாதம் மற்றும் தோசையுடன் பரிமாறலாம்.

(மணம் பரவும்)

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner