Ads Header

Pages


16 March 2012

வாசகிகள் கைமணம் 'கும்' முனு இருக்கு கோஸ் தொக்கு!

வாசகிகள் கைமணம்
'கும்' முனு இருக்கு கோஸ் தொக்கு!

கோஸ் தொக்கு
தேவையானவை: வதக்கி மிக்ஸியில் அரைத்த கோஸ் - ஒரு கப், வறுத்து பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயம், கடுகு - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 கிராம், வெல்லம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இதில் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்த கோஸ் விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரி-யும் வரை வதக்கி இறக்கவும். வெந்தயத்தூள், வெல்லத்தை சேர்க்கவும்.
கோஸ் தொக்கு: ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வதக்கி அரைத்து சேர்த்தால் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்

நூடுல்ஸ் சூப்

தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், பச்சை மிளகாய் - 5, பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (வெங்காயம், குடமிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு) - ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகம், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: சிறிது நூடுல்ஸை எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும்.மீதமுள்ள நூடுல்ஸை கரகரப்பாக பொடித்து, நான்கு கப் தண்ணீரில் பத்து நிமிடம் வேக வைக்கவும்.

ஒரு கடாயில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், அதில் சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும், வேக வைத்த நூடுல்ஸை அந்தத் தண்ணீருடன் இதில் சேர்க்கவும். மேற்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மேலாக வறுத்த நூடுல்ஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்
நூடுல்ஸ் சூப்: நூடுல்ஸை பொடித்து சேர்ப்பதற்கு பதிலாக சோள மாவு, மைதா மாவு தலா ஒரு டீஸ்பூன் கலந்து தண்ணீரில் கரைத்து சேர்க்கலாம்


கடாய் சட்னி!
தேவையான பொருள்கள்:

தக்காளி - 4,
வெங்காயம் - 1,
தனியா - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
வரமிளகாய் - 4,
இஞ்சி - 1 துண்டு (விருப்பப்பட்டால்),
பூண்டு - 4 பல் (விருப்பப்பட்டால்),
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, தனியா, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலையை சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம் பொட்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் பொட்டு வதக்கவும். தக்காளி வதங்கியதும், தேவையான உப்பு சேர்த்து வறுத்த பருப்பு வகைகளுடன் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

விருப்பப்பட்டால் இஞ்சி, பூண்டு வதக்கும்போது சேர்த்து வதக்கி அவற்றுடன் சேர்த்து அரைக்கவும். ருசியான கடாய் செட்னி தயார்.

இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.


தேங்காய் பொடி!
தேவையான பொருள்கள்:

முற்றிய தேங்காய்த் துருவல் - 1 கப்,
உளுத்தம் பருப்பு - 1/2 கப்,
கடலைப் பருப்பு - 1/4 கப்,
வர மிளகாய் - 1/4 கப் அல்லது 10,
பெருங்காயத்தூள் - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவலை சிவக்க வறுக்கவும். தேங்காய்த் துருவல் நல்ல மொறுமொறுவென்று ஆகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு தனித்தனியாக கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.

பிறகு வர மிளகாய், பெருங்காயத்தூள் பொட்டு வறுத்து, உப்பு சேர்த்து முதலில் பருப்புகளை மிக்ஸியில் அரைத்துக் கொண்டு பின் வறுத்த தேங்காய்த் துருவலைப் பொட்டுப் பொடிக்கவும்.

நன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் பொட்டு உபயோகிக்கவும். இது மாறுதலான சுவையுடன் இருக்கும். இட்லி, தோசைக்கு ஏற்றது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner