Ads Header

Pages


24 March 2012

ரத்த அழுத்தம்... பனிபோல் விலக்கிடும் பன்னீர் ரோஜா!

இன்றைய இளம் வயசுக்காரங்களுக்கு ஆபீசுல வேலைப்பளு, கடன் தொல்லை, குடும்ப சிக்கல்னு பிரச்னைகள்லேர்ந்து மீள முடியாம திண்டாடறப்ப ரத்த அழுத்த நோய் உடனே வந்து தொத்திக்கிடும். மயக்கமும், தலை சுத்தலும் வந்து எந்திரிக்க முடியாம இம்சைப்படுத்தும். இதுக்கும் நாட்டு வைத்தியத்துல ஏகப்பட்ட மருந்துகள் இருக்கு... சொல்றேன் கேட்டுக்கிடுங்க!

ரத்த அழுத்தம் சீரடைய...

பன்னீர் ரோஜா பூ தெரியும்தானே..! அதுல நாலு பூவோட இதழ்களை மட்டும் தனியா எடுத்து, ஒரு டம்ளர் தண்ணி விட்டு நல்லா காய்ச்சணும். அரை டம்ளரா சுண்டினதும் இறக்கி வெச்சிரணும். காலையில வெறும் வயித்துல அதைக் குடிச்சிட்டு வந்தா... ரத்த அழுத்தம் சரியா போயிரும்.

இதே நோய்க்கு கைவசம் இன்னொரு வைத்தியமும் இருக்கு. அரை டம்ளர் வாழைத்தண்டு சாறு, அரை டம்ளர் மோர் ரெண்டையும் கலந்துக்கிடணும். இதை 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து குடிச்சிட்டு வந்தோம்னா ரத்த அழுத்தம் குணமாயிரும்.


திரிபலா (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) 50 கிராம், திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி) 50 கிராம், அதோட 100 கிராம் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கணும். இதை காலையிலயும் - சாயங்காலமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு வெறும் வயித்துல ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா ரத்த அழுத்தம் சரியாயிரும். தேவைப்பட்டா சில நாள் இடைவெளி விட்டு திரும்பவும் சாப்பிடலாம்.

ரத்த அழுத்தத்தால வரும் மயக்கம் சரியாக...

சிலருக்கு ரத்த அழுத்தத்துனால தலை சுத்தல், மயக்கம்னு வந்து படுத்த படுக்கையாக்கிடும். அந்த நேரத்துல ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில போட்டு வறுத்துக்கணும். தேன் பதத்தில் பாகுமாதிரி வந்ததும், 3 இன்ச் அளவுள்ள இஞ்சித்துண்டை நல்லா அரைச்சி வடிகட்டி, ஒரு டம்ளர் தண்ணிய சேர்க்கணும். இதுகூட 25 கிராம் காஞ்ச திராட்சையைப் போட்டு கொதிக்க வைக்கணும். இது அரை டம்ளரானதும் இறக்கி வெச்சி ஆறினதும் பழத்தை சாப்பிட்டு தண்ணியையும் குடிக்கணும். காலைல, சாயந்தரம்னு மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா மயக்கம் தெளிஞ்சி, ரத்த அழுத்தமும் குணமாயிரும்.

1 comments:

'பசி'பரமசிவம் said...

அருமையான இயற்கை மருத்துவம்.
நன்றி கார்த்திக்.

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner