கார்த்தி சந்தானம் நடிப்பில் உருவாகிவந்த திரைப்படம் அலெக்ஷ்பாண்டியன்.
ஒழுங்காக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு FEFSI யின் ஸ்ரைக்கிற்கு பிறகு பாதிப்படைந்தது. தற்போது ஸ்ரைக் முடிவடைந்த நிலையில் இன்னமும் படத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் இயக்குனர் அமீரினால் ஏற்படுத்தப்பட்ட சட்டச்சிக்கல்கள் ஆகும்.
பருத்திவீரன் திரைப்படத்தை அமீரின் அனுமதியின்றி தெலுங்கில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டமையே இத் தடையை அமீர் ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது. தற்போது FEFSI குழுமத்துடன் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பிஸியாக இருக்கும் நடிகர்களான கார்த்தி மற்றும் சந்தானத்தின் கால்சீட் வீணடிக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில் தயாரிப்பு குழு உள்ளது.
1 comments:
அமீர் கிர்rrrrrrrrrrrrrrrrrrrrrrr
Post a Comment