Ads Header

Pages


08 March 2012

``எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு' ! கத்தரிக்காய் துவையல் - சமையல் குறிப்புகள் !

``எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு''



தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் - 1/4 கிலோ
உருளைக் கிழங்கு 2
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1 (நீட்டாக அரிந்தது)
தயிர் - 1 கப்
கொத்துமல்லி, கறிவேப்பிலை (அலங்கரிக்க)
கடுகு, எண்ணெய்
உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு தாளித்து கத்திரிக்காய் போட்டு வதக்கணும். இதில் முக்கியமான விஷயம் என்னன்னா, கத்திரிக்காயை முழுதாக `கட்' செய்யக் கூடாது.

காம்பை மட்டும் எடுத்துவிட்டு நாலு பீஸாக மேலில் இருந்து அடிபாகத்திற்கு சற்று மேல் வரை `கட்' செய்யணும். கத்திரிக்காயை வதக்கிட்டு இருக்கும் போதே, அதில் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு, 2 ஸ்பூன் மிளகாய் தூள் போட்டு மேலும் வதக்கணும். அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம் விழுதை இதில் போட்டு மறுபடியும் கிளறி, இறக்கும் போது கரைத்து வைத்த புளி தண்ணியை சேர்க்கணும். மற்ற குழம்பு மாதிரி இல்லாமல் இந்த ``எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு'' கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கத்திரிக்காய் அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளது. அதை படித்துவிட்டு தான் குமுதம் ஹெல்த் வாசகர்களுக்கு இந்த ரெசிபியைக் கற்று குடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சில பேருக்கு கத்திரிக்காய் என்றாலே அலர்ஜி ஆவதுண்டு. அவர்கள் இந்த ரெசிபியை தவிர்த்து விடுவது நல்லது
----------------------------------------------------------------------------------------------


கத்தரிக்காய் துவையல்

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய் - 2
மிளகு சீரகம் - சிறிதளவு
தேங்காய் - சிறு துண்டு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
கடலை பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பில்லை - சிறிதளவு
புளி - சிறு எலுமிச்சை அளவு
உப்பு - சிறிதளவு

செய்முறை:

விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து சுட்டு கொள்ள வேண்டும். மேலே கருகிய தோலை
எடுத்து விட வேண்டும்.

அனைத்து பொருள்களையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.

தோலை நீக்கிய கத்தரிக்காய் & வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில்
அரைத்து எடுக்கவும். வேண்டும் என்றால் எண்ணெய் கடுகு சேர்த்து தாளித்து கொள்ளலாம்.

வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner