Ads Header

Pages


13 March 2012

காதலில் சொதப்புவது எப்படி? - நீங்க பார்க்கலாமா? கூடாதா?


கதை ரொம்ப சிம்ப்பிள் அண்ட் நீட்.. எம் ஜி ஆர் அன்பே வா படத்திலும், எஸ் ஜே சூர்யா குஷி படத்திலும் சொன்னதுதான்.. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்கள் அவர்கள் அன்பை குறைத்து விடாது, இறுதியில் சேர்த்து விடும்.. இந்த ஒன்லைன் கதையை 8 நிமிட குறும்படத்தில் எந்த அளவு சுவராஸ்யமாய் சொன்னாரோ அதே அளவு சுவராஸ்யத்துடன் திரையிலும் சொல்லி இருக்கிறார்..
சித்தார்த்தின் காதலி அமலா பால் ஃபேமிலில அப்பா சுரேஷ் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கார்.. டைவர்ஸ் வரை போகுது.. அந்த கேசை டீல் பண்றது சித்தார்த்தின் அப்பா.. சின்ன சின்ன விஷயத்துக்காக அடிச்சுக்கற, பிரிஞ்சுக்கற சித்தார்த் - அமலா பால் காதல் ஜோடி, அது போக அவங்க நண்பர்களில் 3 காதல் ஜோடி எப்படி ஊடல் தாண்டி கூடல் வரை சுபமா சேர்றாங்க என்பது தான் கல கல காதல் திரைக்கதை..
 
தமிழ் சினிமா பயன் படுத்த தவறிய நல்ல நடிகர்களில் ஒருவர் சித்தார்த் என்பது இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது. மவுன ராகம் கார்த்திக்கிடம் பார்த்த அதே துள்ளல், இளமை என ஆள் செம கலாய்க்கும் நடிப்பு.. ஆனால் அவர் சுற்றுலா கைடு போல் ஆடியன்சை பார்த்து கதை சொல்வது, அவ்வப்போது கதை மாந்தர்களிடமிருந்து ஒரு ஸ்டெப் விலகி கேமராவைப்பார்த்து கமெண்ட் சொல்வது அந்நியம் ஆக்குகிறது.. குறும்படத்தில் சக்ஸஸ் ஆன இந்த டெக்னிக் திரைபப்டத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை..
 
அமலா பால் மெழுகு பொம்மை போல் வர்றார்.. நல்ல கெமிஸ்ட்ரி.. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.. படத்தில் வரும் 78 சீன்களில் ஒரு சீனில் கூட துப்பட்டா போடாமல் வருவதற்கு நன்றி தெரிவிப்பதா? வாழ்த்து சொல்வதா? ( 2 சீன்ல மட்டும் போனா போகுதுன்னு துப்பட்டா இருக்கு கழுத்து ஒண்ட.. ஹி ஹி )
 
குறும்படத்தில் சித்தார்த்தின் நண்பர்களாக வந்த அதே ஆட்கள் தான் இதிலும்.. மனிதர்கள் கலக்கி எடுத்துட்டாங்க.. அந்த தாடிக்காரரின் நடிப்பு செம செம.. குண்டு பப்ளிமாசாக வரும் நண்பர் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாய் ஹீரோ ஹீரோயின்  இருவர்க்கு இடையே பஞ்சாயத்து பேசும்போது மேலும் சண்டையை இழுத்து விடும் சீன் தியேட்ட்டரே அல்லோலகல்லோலப்படும் அதகளம் ஆரவாரம்.. வாட் எ ஒண்டர் ஃபுல் பர்ஃபார்மென்ஸ்.. பை டைரக்டர்.. 
 
அமலா பாலின் அப்பாவாக வரும் சுரேஷ்  பாந்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்..கோயிலில் அவர் தன் மனைவியை பல வருட பிரிவுக்குப்பின் அணைக்கும் காட்சியில் சத்யா பட பாட்டு - வளையோசை  கல கல -- கலக்கல்
 
ஹீரோ - ஹீரோயின் இருவர் பெற்றோரையும் மிகச்சிறப்பாக கதைக்குள் கொண்டு வந்த விதம் வெல்டன்..
 
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கன கச்சிதம்.. யூத் ஃபுல்..
 
இந்தப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? ஒருவனுக்கு ஒருத்தி என ஒரே ஒரு உள்ளத்தை ஆயுள் முழுக்க காதலிக்க நினைக்கும் உண்மையான காதலர்கள், சின்ன சின்ன பிரச்சனைகளால் ஊடல் கொண்டிருக்கும் தம்பதிகள், கணவனை பிரிந்து வாழும் மனைவிகள், மனைவியை பிரிந்து வழும் கணவர்கள்,காதலிக்க நினைப்பவர்கள் என எல்லாரும் பார்க்கலாம்..
 
யாரெல்லாம் பார்க்கக்கூடாது? பஞ்ச் டயலாக், ஓப்பனிங்க் ஃபைட் வேணும் என்ற மசாலா பட ரசிகர்கள்,ஹீரோ ஒரு அடி அடித்தால் 56 பேர் ஆஸ்பிடலில் போய் படுக்கனும்னு நினைக்கற ஓவர் பில்டப் ஒலக சாமிகள் தவிர்க்க வேண்டிய படம்.
 
ஏராளமான திறமைகளை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு , தங்கள் தன்மானத்தை அடகு வைத்து, இளமையை தொலைத்து கனவுத்தொழிற்சாலை என்று வர்ணிக்கப்படும் கோடம்பாக்கத்தில் குடி இருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாய் எட்டு நிமிட குறும்படத்தையே விசிட்டிங்க் கார்டாக வைத்து  இரண்டரை மணி நேர படம் எடுக்கும் வாய்ப்பை தேடி வந்த சீதனமாய் பெற்று, பெயரை தக்க வைத்திருக்கும் நாளைய இயக்குநர் புகழ்  பாலாஜி மோகன்-க்கு வாழ்த்துக்கள்.

2 comments:

Anonymous said...

athukku avanga relation நீரவ் ஷா irunthaar matravarkalukku...

சி.பி.செந்தில்குமார் said...

இந்த இடுகை நீங்க சொந்தமா எழுதுனதா?

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner