Ads Header

Pages


24 August 2012

ஆஸ்துமா நோய்க்கு சித்த மருத்துவ முறைகள்.

ஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில்உள்ள காம்பு, இலை நரம்புகளை சுத்தமாக நீக்கி சிறிதாக நறுக்கி தேன்விட்டுமென்மையாக வதக்கி, 2 குவளை தண்ணீரில் 10 கிராம் அளவு இலைகளைப் போட்டுநன்றாக காய்ச்சி 1/2 குவளையாக வந்தபின் அருந்தவேண்டும். இவ்வாறு தினமும்இருவேளை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறையும்.

· தூதுவளை , இம்பூரல், ஆடாதோடை, சங்கன் வேர், சுக்கு, திப்பிலி,பற்படகம், கண்டக்காலி, வழுதுனை வேர், வீலி இவைகளை சம அளவு எடுத்து நான்குபங்கு நீர்விட்டு எட்டில் 1 பங்காக நன்கு காய்ச்சி தேன் கலந்துஉட்கொண்டால் இரைப்பு, இருமல் நோய்கள் நீங்கும்.

· ஆடாதோடை இலைச் சாற்றில் தாளிச பத்திரி இலைத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, இருமல் நீங்கும்.

· நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் ஆடாதோடை வேர்ப்பட்டை, கோஷ்டம்,சிற்றரத்தை, வசம்பு, மிளகு இவற்றை வாங்கி சம அளவு எடுத்து முறைப்படிசுத்தம் செய்து சூரணமாக்கி, 15 கிராம் அளவு சூரணத்திற்கு 400 மில்லிகிராம் தண்ணீர் விட்டு 100 மில்லியாக வற்ற வைத்து தினமும் மூன்று வேளைக்குபங்கிட்டு அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் ஆச்சர்யம் படும் வகையில்குணமாகும்.

· திப்பிலி லேகியம்

திப்பிலி 70 கிராம் எடுத்து அதனுடன் சீரகம், சுக்கு, ஏலம், திப்பிலிவேர்,வாய்விடங்கம், கடுக்காய், மிளகு இவற்றை வகைக்கு 8 1/2 கிராம் அளவு எடுத்துஇளம் வறுப்பாக வறுத்து, பொடியாக்கி, தேன், சர்க்கரை சேர்த்து காய்ச்சிபாகு பதத்தில் இறக்கி நன்றாக கடைந்து 1 ஸ்பூன் அளவு தினமும் இருவேளை என 48நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு, இருமல் ஈளை நீங்கும்.

ஆஸ்துமா நோய்க்கு அடிப்படைக் காரணங்கள் ஒவ்வாமை (Allergy)பாரம்பரியம்,

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய ஆசனங்கள்

மச்சாசனம், புயங்காசனம், பிராணயாமம்.

பிராணயாமம் செய்யும் போது சுவாசத்தை நன்கு உள்வாங்கி வெளிவிடுவதால்உடலுக்கு அனைத்து பகுதிகளுக்கும் பிராண வாயு சீராக கிடைக்கும் இதனால்உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் தாக்காமல் நம்மை தற்காத்துக் கொள்ள சில மருத்துவ ஆலோசனைகள்

· கபத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வாசனை திரவியங்களில் உள்ளமணம் சில சமயங்களில் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அதனை ஒதுக்குதல் நல்லது.

· மாசு, தூசு நிறைந்த பகுதிகளிலும் மண், புழுதி உள்ள பகுதிகளில் செல்லும் போது மூக்கை துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

· வளர்ப்பு பிராணிகளுடன் அதிகமாக ஒட்டி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

· அடிக்கடி கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுதல் வேண்டும்.

· நன்கு காய்ச்சிய நீரையே அருந்த வேண்டும். வெந்நீரிலேயே குளிக்க வேண்டும்.

· இரவு உணவில் நீர்த்துவமான கஞ்சி வகைகளை உண்ண வேண்டும். அதுவும் இரவு 7 மணிக்குள் உண்பது நல்லது.

· மது, புகை, போதை வஸ்துக்களை அறவே தொடக் கூடாது.

· மிகக் குளிர்ச்சியான உணவுகளை தவிருங்கள்.

மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்தால் அல்லல் படுத்தும் ஆத்துமாவின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner