Ads Header

Pages


05 August 2012

`பளபள' கூந்தலுக்கு...டிப்ஸ்!

`ளபள' கூந்தலுக்கு...
பொதுவாக பெண்கள் தங்களின் கூந்தல் அடர்த்தியாக... நீளமாக... செழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
அதற்கு நீங்களே... வீட்டில் சிம்பிளாக தைலம் தயாரித்து, அன்றாடம் தலைக்கு தேய்த்துக் குளித்தால் அருவி போன்ற... கருகரு கூந்தல் செழித்து வளரும்!
மருதாணி இலைகளை நன்றாக மை போல் அரைத்து, சிறு சிறு வில்லைகளாகத் தட்டி நல்லெண்ணையில் போட்டு வெயிலில் வைக்கவும்.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, கருவேலம்பட்டையுடன் வேப்ப ஈர்க்கையும் சேர்த்து பொடி செய்து, அதில் போட்டு இன்னொரு நாம் வெயிலில் வைக்கவும். மறுநாள் அதை அப்படியே அடுப்பில் வைத்து சீரான சிறு தீயில் காய்ச்சவும்.
மருதாணி வில்லைகள் சிவந்து முறுகலாக வரும் தருணத்தில் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
500 மி.லி.எண்ணைக்கு இரண்டு கைப்பிடி மருதாணி இலைகளும், 30 கிராம் கருவேலம்பட்டை,
வேப்ப ஈர்க்கள் பொடியையும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தைலத்தை தினசரி உபயோகித்து வந்தால், கேசம் பள பளப்பாய்... செழுமையாக ஜிலுஜிலுவென்று வளரும். உடலும் குளிர்ச்சியாக குளு குளுவென்று இருக்கும்!
அப்புறம் எந்த விழாவுக்கு சென்றாலும்... முடிசூடா ராணி நீங்கள் தான்!

1 comments:

Marzook Mansoor said...

இந்த தகவல்கள் அனைத்தையும்
ஒன்றுவிடாமல் FOLLOW பண்ணுகின்றேன்
மிகவும் பிரயோசனமாக இருகின்றது
வாழ்க உங்கள் சேவை

நன்றி
தோப்பூர் - பஸ்மினா மர்சூக்
அபுதாபி
12 .08 .2012

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner