Ads Header

Pages


04 August 2012

சில சமையலறை டிப்ஸ்கள்!

சில சமையலறை டிப்ஸ்கள்!

முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காய்ச்சும் போது அடிபிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாள் சமாளித்தது போதும், அவற்றிலிருந்து விடுதலை பெற சில சமையலறை குறிப்புகள் உங்களுக்காகவே ....

1. பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்.

2. காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

3. தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும்.

4. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

5. மண் கறைகளை துணிகளிலிருந்து நீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளை வேக வைத்த தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து சுத்தம் செய்யவும்.

6. பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.

7. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.

8. முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

9. ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.

10. வெங்காயம் நறுக்கும் போது கண்ணிலிருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் ஆரம்பிக்கலாம்.

11. உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

12. வெங்காயத்தின் நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு, வேறென்ன, டூத்பேஸ்ட் தான் சிறந்த வழி.

13. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

14. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரால் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

15. முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.

16. சுண்டல் முதலிய அயிட்டங்கள் செய்ய பட்டாணி, கொண்டக்கடலை, மொச்சை போன்றவற்றை ஊறவைக்க மறந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றாமல் கடலை வகைகளை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பக்கத்தில் இரு மடங்கு தண்ணீரைக் கொதிக்க வையுங்கள். வறுத்த கடலையில் கொதிக்கும் நீரை விட்டு வழக்கம்போல குக்கரில் வேக வைத்தால், நன்கு வெந்துவிடும்.

2 comments:

Unknown said...

சில சமையலறை டிப்ஸ்கள்!

All the tips are very useful thank you for sharing.

Marzook Mansoor said...

இந்த தகவல்கள் அனைத்தையும்
ஒன்றுவிடாமல் FOLLOW பண்ணுகின்றேன்
மிகவும் பிரயோசனமாக இருகின்றது
வாழ்க உங்கள் சேவை

நன்றி
தோப்பூர் - பஸ்மினா மர்சூக்
அபுதாபி
12 .08 .2012

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner