Ads Header

Pages


24 August 2012

மாத விலக்கு சீராக ஆக...

காயவச்சி பொடிச்ச

கோவை இலை - 2 கிராம்

மணத்தக்காளி இலை - 2 கிராம்

செம்பருத்தி பூ - 2 கிராம்

ரோஜா இதழ் - 2 கிராம்

துளசி - 2 கிராம்

சுக்கு - 2 கிராம்

மிளகு - 2 கிராம்

திப்பிலி - 2 கிராம்

சித்தரத்தை - 2 கிராம்

இவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் 2 வெற்றிலை சேர்த்து 200 மி.லி. தண்ணீரில் பாதியாக வற்றக் காய்ச்சி காலை, மாலை இருவேளை என மாதவிலக்கு வரும் நாளுக்கு மூணு நாளுக்கு முன்னாடி குடிக்கணும். சிலருக்கு மாதவிலக்கு வரும் நாள் தள்ளிப்போனால் மாதவிலக்கு வரும் நாளை கணக்கு வைத்து அருந்த வேண்டும். இப்படி மூணு மாதங்கள் மாதவிலக்கு காலத்துல குடிச்சிக்கிட்டு வர்றது நல்லது.

பொண்ணுகளுக்கு எது வேனாலும் முன்பின்னா இருக்கலாம். ஆனால் மாதவிலக்கு மட்டும் சரியா இருக்கணும். மாதா மாதம் போறதுனால தான அத மாதவிலக்குனு சொல்லுறாங்க.. இல்லயின்னா அதுனால பல சங்கடங்கள் வரும். உதிரம் ஒழுங்காப் போனாத்தான் பொண்ணுங்க சரீரம் ஆரோக்கியமா இருக்கும்.

மொதல்ல நேரத்துக்கு சத்தான ஆகாரங்களைச் சாப்பிடணும். தேவையான அளவு தூங்கணும், பொண்ணுகளுக்கு மாத விலக்குங்குறது வெறும் உடம்பு சம்பந்தப்பட்டதும் மட்டுமில்ல மனசு சம்பந்தப்பட்டதும் கூட சஞ்சலத்துனால மனசு விவகாரம் அடையுறபோது எல்லா பாதிப்பும் வரும், அது வயசுக் கோளாறாவும் இருக்கலாம். இத கண்டுக்காம விட்டுட்டா பிற்காலத்துல குழந்தை பேறுல கூட பிரச்சனைய உண்டாக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner