Ads Header

Pages


14 August 2012

வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி

ர்வார்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தினமும் ஐந்து வேளை வீதம் பதினான்கு நாள்கள் வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி நான்கு மடங்கு அதிகரித்து விடும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
காரணம் என்ன? தேயிலையின் சாற்றில் தியானைன், காட்சின்ஸ், ஈஜிசிஜி என்ற மூன்று நோய் நச்சு முறிவு மருந்துகள் உள்ளன. இவை மிகவும் சக்தி வாய்ந்தவை.

தேநீரை மூன்று வேளைகளுக்கு மேல் அருந்தினால் இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்து குறையவும், நாக்கு வறட்சி அதிகரிக்கவும் உடனடியாக வாய்ப்பு அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்திக்காக மருந்துபோல தேநீரை அளவுடன் அருந்தினால் போதும். கூடவே இரும்புச்சத்து, வைட்டமின் சி நிரம்பிய உணவுகளையும் தாராளமாகச் சேர்த்து வருவது மிகவும் முக்கியம்.

தினமும் 5 வேளை தேநீர் என்பவர்கள் மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோரின் ஆலோசனைப்படி இரண்டு வாரங்கள் தேநீர் அருந்தி பூரண உடல் நலம் பெற வேண்டும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner