Ads Header

Pages


27 August 2012

முகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், முக வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு

5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன்

ரோஜா இதழ்

சந்தனத்தூள்

காய்ந்த எலுமிச்சை தோல்

செஞ்சந்தனம்

இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பிறகு சிறுபயறு மாவு கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், முக வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு பெறும்.

சிலருக்குக் கழுத்தில் செயின் போட்ட பகுதிகளில் கருத்து காணப்படும். மேலும் சிலருக்கு இறுக்கமான ஆடை அணிவதால் உடம்பில் சில பகுதிகளில் தோல் கறுத்து காணப்படும். அப்படி கறுத்த பகுதிகளில் இதனைப் பூசி வந்தால் கருமை நிறம் மாறும்.

செம்பருத்திப் பூ இதழ்களை நன்கு மை போல் அரைத்து அதனுடன் பயத்த மாவு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற பூனைமுடிகள் உதிரும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner