Ads Header

Pages


05 August 2012

தலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரியுமா?

ழகே வணக்கம்!

வீட்டிலேயே தினப்படி மேற்கொள்ளும் அழகு வழிமுறைகளும் உண்டு.

* சின்னவயதில் முகத்தில் அடிக்கடி பரு வரும். காய்ந்த பருவை வேரோடு நீக்க, என் அத்தை ஒரு அருமையான ஐடியா சொன்னாங்க. முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு சுத்தமான துணியில் நனைத்து பருமீது பரப்புங்கள். முட்டை காய்ந்ததும் துணியை உரித்து எடுத்தால் பருவும் துணியோடு சேர்ந்து வந்துவிடும். கரும்புள்ளிகளையும் இந்த முறையில் நீக்கலாம்.

*பாதங்கள் மென்மையா, பளபளப்பா ஜொலிக்க ஒரு வழி இருக்கு. ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து, அதில் கல்உப்பை ஒரு கைப்பிடி போட்டு கரையுங்கள். அதில் கால்களை அரைமணி நேரம் அமிழ்த்தி வைத்துவிட்டு, பிறகு பியூமிஸ் கல் ( எல்லா ஃபேன்ஸி ஸ்டோர்களிலும் கிடைக்கும்) கொண்டு மென்மையாகத் தேய்த்தால் கால்களின் வெடிப்பு நீங்கி மென்மையாக ஒளிரும்.

*தலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரியுமா? இரண்டு பெங்களூர் தக்காளியை ஜூஸ் அடித்து.. நோ..நோ! குடிக்கக்கூடாது. அப்படியே தலையில் பூசுங்கள். அரைமணி ஊறியதும் மைல்டு ஷாம்பூ போட்டு தலைமுடியை அலச வேண்டியதுதான். தக்காளியிலுள்ள அமிலம் நம் தலைமுடியின் காரத் தன்மை மற்றும் அமிலத்தன்மையை சரியான அளவு பாலன்ஸ் பண்ணுமாம். அதனால் முடி ஹெல்த்தியாகப் பளபளக்கும்.

* காபி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அட... குடிக்க இல்லீங்க! தலைக்கு ஊற்றிக் குளிக்க. பால் சேர்க்காமல் கால் கப் ஸ்டிராங் காபி டிகாக்ஷனைத் தலையில் நல்லா தேய்த்து இருபது நிமிடம் ஊறிய பிறகு தலையை அலசுங்கள். அருமையான ஒரு கரும் பிரவுன் நிறத்தில் கூந்தல் ஜொலிக்கும்.

காபி டிகாக்ஷன் மாதிரியே தலைமுடிக்கு ஒரு அலாதியான பளபளப்பு தருவது டீ டிகாக்ஷன். தலைக்குக் குளிக்கும்போது கடைசி கப் தண்ணீரில் கொஞ்சம் டீ டிகாக்ஷன் கலந்து தலையில் ஊற்றுங்கள். அதன்பிறகு, வெறும் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை.

தலைமுடிக்கு ஊட்டச்சத்தும் பளபளப்பும் கிடைக்க, முட்டையின் வெண்கருவை தலையில் பூசி ஊறி, சிறிது நேரத்துக்குப் பிறகு ஷாம்பு போட்டு அலசினாலும் கூந்தல் பளபளக்கும்.

முகத்தில் வாயோரம், கண்ணோரம் ஏற்படக்கூடிய சின்னச் சின்ன சுருக்கங்களைச் சரி பண்ண ஒரு இயற்கை வழி சொல்லட்டுமா? விதையில்லாத பச்சை திராட்சைப் பழங்களின் சாற்றை எடுத்து இந்தச் சுருக்கங்களின்மேல் பூசுங்கள். நாளாவட்டத்தில் சுருக்கம் காணாமலே போய், முகம் பளிச்சென ஆகும்.

1 comments:

Unknown said...

Thank you very much Karthik Just try

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner