Ads Header

Pages


08 August 2012

சளி-இருமல் விலக-பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!

க்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!

குழந்தைகளின் சளிக்கு: ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.

பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு: இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து, பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் விலக: அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊறவச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக்குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்.

மாந்தம் போக்க: ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் துளசிச்சாறை கொடுத்தால்... மாந்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓடியே போகும். குழந்தையும் அழுகையை நிறுத்தி நிம்மதியாகத் தூங்கும்.

மூச்சு விடத் திணறுபவர்கள் துளசி இலையை காயவைத்து அரைத்து, அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் நீங்கும். துளசி இலையை தண்ணீரில் போட்டுக்குடித்தால், தொடர் இருமல் தொல்லை நீங்கும். சுடுநீரில் துளசி இலையைப் போட்டு ஆவிபிடித்தால், சளி, மண்டைக் குத்தல் குணமாகும். பேறுகாலம் முடிந்த பெண்கள் துளசி விதையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வேண்டாத அழுக்கு நீங்கும்.

அடிவயிற்றுக் குத்தல், வலி சரியாகும். ஒரு கைப்பிடி துளசிக் கொழுந்தை இஞ்சி சேர்த்து அரைத்து, மாத்திரை போல் உருட்டி, காயவைத்து எடுத்து, தேனில் கலந்து கொடுத்தால், வறட்டு இருமல் காணாமல் போகும். கட்டிகள் இருந்தாலோ, வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது வண்டு கடித்திருந்தாலோ அந்த இடத்தில் துளசியை அரைத்துப் பூசினால், உடனடி குணம் கிடைக்கும். துளசியை ரசமாக செய்து சாப்பிட்டால் வாய்கசப்பு முற்றிலும் நீங்கி, ஜூரமும் வந்த வேகத்தில் ஓடிவிடும்.

2 comments:

Marzook Mansoor said...

நல்ல தகவல் - பிரயோசனமாக உள்ளது
தினமும் - ஒரு தகவலினை என் காதலி பஸ்மினாவுக்கு
forward பண்ணுவதில் மகிழ்ச்சியடைகின்றேன் .

நன்றி
தோப்பூர் - மர்சூக் மன்ஸூர்
அபுதாபி
12 .08 .2012

மழை said...

சித்த மருத்துவம் பயணுள்ளவை நன்றி.

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner