Ads Header

Pages


13 August 2012

தலையில் பொடுகா? கவலையை விடுங்கள்.

லையில் பொடுகா? கவலையை விடுங்கள்.


* பொடுகு வராம‌ல் தடு‌க்க ம‌ற்றவ‌ர் பய‌ன்படு‌த்‌திய ‌சீ‌ப்பை பய‌ன்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்.
* வாரம் இருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையை தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
* நெய், பால், வெண்ணெய் முத‌லிய உணவுகளை ‌சி‌றிது உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
* இந்தக் கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசை கிடைக்கிறது. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடியைக் காப்பாற்றலாம்

பொடுகை அழிக்க

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.
*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.
*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.
*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.
*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.
*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

பொடுகுக்கு டாட்டா!

* மூன்று கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலைகளை நன்றாக கழுவி, பசை மாதிரி அரைத்து தலையில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து குளியுங்கள்.

* 100 கிராம் சித்தாமுட்டி வேரை எடுங்கள். இதில் 400 மி.லி தண்ணீர் ஊற்றுங்கள். இது 100 மிலி ஆகும்வரை சுண்ட காய்ச்சுங்கள். பிறகு லேசாக ஆறவைத்து அதைதலையில் தேய்த்துக் குளியுங்கள்.

* அதிமதுரம் 50 கிராம், விதை நீக்கிய நெல்லிக்காய் 50 கிராம் நீலி இலை மூன்று கைப்பிடி அளவு... இவை மூன்றையும் கலந்து நன்றாக அரைத்து குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக தலையில் தேயுங்கள் ஊறிய பிறகு குளியுங்கள்.

* பொடுகு, முடி உதிர்தல், இளநரை... இந்த மூன்று பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு இருக்கிறது இந்த எண்ணெயில். இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்...

* மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலை, நீலி இலை.... இவை ஒவ்வொன்றையும் மூன்று கைப்பிடி அளவு எடுத்து, நன்றாக அரைத்து சாறு பிழிந்து தனியே வையுங்கள். நெல்லிக்காய் வற்றல், அதிமதுரம், கடுக்காய்.... மூன்றையும் தலா 50 கிராம் எடுத்து, இவற்றுடன் 600 மி.லி தண்ணீர் சேர்த்து அதை 150 மி.லி. ஆகும் வரை சுண்டக் காய்ச்சி கஷாயமாக்குங்கள்.

இந்த கஷாயத்துடன், ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் இலைச்சாறு 200 மி.லி சுத்தமான பால், 200 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் காய்ச்சுங்கள். தண்ணீர் மொத்தமும் வற்றி, வெறும் எண்ணெய் மட்டும் மிஞ்சும் வரை காய்ச்சுங்கள்.

இந்த எண்ணெய், கூந்தல் பிரச்னைகளுக்கு அற்புதமான நிவாரணி!

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner