Ads Header

Pages


25 August 2012

முகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு...

முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

· பாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1ஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் பலப்படும். அழகும் கூடும்.

· தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குணமாகும். இரத்தசோகை குணமானால் உடல் ஆரோக்கியம் பெறும்.

· புதினாவுடன் தேங்காய் கலந்து சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவும் எளிதில் சீரணமாகும். நன்கு பசி தூண்டும். முகப் பொலிவும் உண்டாகும்.

· உலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊறவைத்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் நலம் பெறும். முகம் வசீகரமாக இருக்கும்.

· பப்பாளிபழம், ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.

· தினமும் ஏதாவது ஒரு கீரை, பசுநெய் சேர்த்துக்கொள்வது நல்லது.

உடலுக்குத் தேவையான ஓய்வு தேவை. அதிக ஓய்வும் உடலைக் கெடுக்கும்.

மேலும் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் முகம் எப்போதும் பொலிவாக இருக்கும்.

ஆனந்தம் அழகைக் கூட்டும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner