Ads Header

Pages


14 August 2012

கருவேப்பிலை பொடி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

வ்வொரு உணவிலேயும் ஒரு விதமான மருத்துவ குணம் நிரம்பியிருக்கு. இதுல (சர்க்கரை வியாதி, உடல்பருமன், வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு, மற்றும் உடலுக்கு வலுவூட்டக்கூடிய உணவுப்பொருள்கள், அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும், உபயோகப்படுத்தும் உணவுப் பொருட்கள் என...) ரெண்டுவிதமான உணவுப் பொருட்களை தயார்பன்றேங்க.

‘‘எளைச்சவனுக்கு என்று கொடுங்க... கொழுத்தவனுக்கு கொள்ளுக் கொடுங்க’’ன்னு ஏதோ அடுக்கு மொழிக்காக சொல்லலீங்க... அது முழுக்க முழுக்க உண்மை. நார்ச்சத்து நிறைந்த ‘கொள்ளு’ சாப்பிட்டா உடம்பில் உள்ள கொழுப்புக்கு ‘குட்பை’ சொல்லிட்டு ஐம்பது கிலோ தாஜ்மஹாலை ஜொலிக்கலாம்.

கருவேப்பிலை பொடியை ‘மைக்ரோ ஓவனில்’ வைத்து உலர்த்தி பொடி செய்தால், அதில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும். எனவே கருவேப்பிலையை பொடியாக்கி மோரிலோ, சாதத்திலோ, கலந்தும் இட்லி, தோசையிலோ தொட்டுக் கொண்டோ சாப்பிட்டால் சுவைக்கு சுவை; ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியம். இந்த பொடியில் ‘குளோரஃபில்’ சத்து அடங்கியிருப்பதால் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மட்டுமில்லாம, கண்பார்வையும் பிரகாசமா ஆகிடும்.

அதே மாதிரி வெந்தயத்தை அழைச்சுப் பக்குவப்படுத்தி சின்ன சைஸ்ல உருண்டை செஞ்சு -தனமும் கவலையில் வெறும் வயித்துல சாப்பிட்டு வந்தாப் போதும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்ல மருந்து. சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும் சர்க்கரை வியாதிக்காரர்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

பாகற்காய் என்றாலே பலர் பலமயில் தூரம் ஓடுவாங்க. ஆனா அந்தப் பாகற்காயை நல்லா பொடி ஆக்கி கருவேப்பிலை, பெருங்காயம், புளி, உப்பு’ன்னு சரியான அளவு கலந்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் பாகற்காய்ன்னா ஓடி வருவீங்க.

அதேமாதிரி சோயாவை கலந்தாலே கசக்கும்னு பலர் நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா சோயாவை பருப்புப் பொடியில கலந்து சாப்பிட்டா ரொம்ப ருசியாவும், இருக்கும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். இது குழந்தைகள் சாப்பிட்டால் உடலில் எலும்பும் தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும். அதே மாதிரி எல்லாரும் இட்லி பொடியை தயார் பண்ணும்போது அகல கலக்குற உளுந்தைத் தோல் நீக்கி அரைக்கிறாங்க. அப்படியில்லாம தோலோடு சேர்த்து அரைக்கணும். ஏன்னா தோலில்தான் புரோட்டின் மற்றும் நார்ச்சத்து அடங்கியிருக்கு. திணை, கோதுமையுடன் கூடிய உளுந்து, பயிறு, கடலைப் பருப்பு எல்லாத்தையும் கலந்து கஞ்சி வெச்சு ‘பசி வயித்தை கிள்ளுதப்பா’ன்னு யஅகோரப்பசியில இருக்கிறவங்க இந்தக் கஞ்சியை சாப்பிட்டாப்போதும். பசி பட்டுனு' பறந்துடும். சர்க்கரை வியாதிக்காரர்கள் அரிசிக்கு பதிலா கோதுமையை சாப்பிடுறதை விட இந்தக் கஞ்சியை சாப்பிட்டா ருசியாவும் செரிமானமும் சரியாக இருக்கும். எடை அதிகமாகாது.

அதைவிட நான் தற்போது தயாரித்த ‘நைன் இன் நைன் ஃபுட்’ உணவுப் பொருளுக்கு ஏகோபித்த வரவேற்புங்க’’ என்றவரை வழிமறித்து, அதென்ன நைன் இன் நைன் ஃபுட்? என்றோம்.

‘பதப்படுத்தப்பட்ட கோதுமை, பாதாம் பருப்பு, பொட்டுக்கடலை, முந்திரி, சோளம் ஆகியவற்றை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டது. இதை ஒன்பது விதமா தயார் பண்ணி சாப்பிடலாம். இதிலுள்ள சுவையையும் சத்தையும் சொல்லத் தேவையில்லை. திடீர் விருந்தாளி வந்துட்டா சூடான பாலில் ஹார்லிக்ஸ், விவாய மாதிரி இதை கலந்து கொடுத்து அசத்தலாம். ‘சூப்’ சாப்பிடுறவங்க அதில் இதை கலந்து கலந்து சாப்பிட்டால் ‘சூப்பரா இருக்கும்னு’ கொள்ளுங்க. காய்கறிகளோட சேர்த்து சமைக்கிறதுக்கும், உடனடி ‘சட்னி’ தயார் பன்றதுக்கும் பயன்படுத்திக்கலாம். வெட்டின வெங்காயம் பச்சைமிளகாய், கொத்தமல்லி கலந்து சமோசா செய்வதற்கும், அப்படியே சுக்குமல்லி காஃபி, பழச்சாறு போன்றவைகளையும் தயார் செய்யலாம்.

சாதாரணமா சுக்கு காஃபின்னு எடுத்துக்கிட்டா பதினைஞ்சு விதமான பொருட்களை கலந்து சுக்குவோட உண்மையான மருத்துவ குணத்தையே குறைச்சுடுவாங்க. ஆனால் வெறும் சுக்கு, மல்லி இரண்டையும் அறைச்சு பின்பு சுக்கு மல்லி காஃபியை குடிச்சா எப்பேர்பட்ட சளியா இருந்தாலும் அரண்டு மிரண்டு ஓடும். பசியின்மை, வயிறு உப்புசம், தலைவலி போன்ற எந்த பிரச்னையும் தலைகாட்டாது.

அடுத்த ஜீர்ணா, வரைவு உணவகத்துல சாப்பிட்டு வயிறு கோளாறில பாதிக்கப்பட்டவங்க, பசியின்மை உள்ளவங்க, சுக்கு, மிளகு, திப்பிலி நார்த்தங்காய்னு கலந்து தயாரிச்சு சாப்பிடுற இந்த ‘ஜீர்ண’ வயிற்றுக் கோளாறுகளை விரட்டி அடிக்கலாம்.

புதினாவை பொடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம். ஜீரண சக்தியை அதிகரித்து, பசி அற்றவர்களுக்கு பசியைத் தூண்டும். இதை சாதத்திலோ மோரிலோ கலந்து சாப்பிடலாம்.

இப்படி ஏகப்பட்ட உணவுப் பொருட்களில் ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள், இருக்க, நாமே ஏன் கண்டதை சாப்பிட்டு மருந்து மாத்திரைகளை தேடி ஓடனும்’’

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner