Ads Header

Pages


28 September 2012

இரத்த சோகையை போக்க இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள் என்ன? எது?

ரத்த சோகையை போக்க--இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள் என்ன? எது?

கீரைகள்/கீரைத் தண்டுகள்:

முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, துளசிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, காலிபிளவர்.

காய்:

பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ்.

கனிகள்:

சீதாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளம்பழம், தர்பூசணி, சப்போட்டா, பேரீட்சை, உலர்ந்த திராட்சை.

தானியங்கள் மற்றும் பருப்பு:

கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, சாமை, பொட்டுக்கடலை சோயாபீன்ஸ், பட்டாணி.

அசைவ உணவு:

ஆட்டுக்கறி, ஈரல், முட்டை, மீன், இறால்

திரவ உணவு:

பொட்டுக்கடலை கஞ்சி, கேழ்வரகுக் கஞ்சி.

பிற உணவு வகைகள்:

வெல்லம்

அதிரசம்

கடலை மிட்டாய்

கடலை உருண்டை (வெல்லம் கலந்தது)

பனங்கற்கண்டு கலந்த பால்

கருப்பட்டி மற்றும் கேழ்வரகு மாவு

பொரி உருண்டை

பொட்டுக்கடலைப் பாயசம்

பேரீச்சம் பழம்

பொரிவிளங்காய் உருண்டை (அரிசி/கடலை/வெல்லம் கலந்தது)

வைட்டமின் "சி" இரும்புச்சத்தை கிரகிக்க வைக்கும் ஓர் ஊக்குவிக்கி ஆகும். அதுபோலவே, உணவு அருந்திய உடனோ, அல்லது ஒரு மணி நேரத்திற்குள்ளோ தேநீர், காபி அருந்துவது கூடாது. அது உடம்பில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைக் குறைக்கும்.

1. முயல், ஆடு இவற்றின் ஈரல்கள் - லேசாக சமைக்கப்பட்டவை சோகையை போக்கும்.

2. பழரசங்கள், இனிப்பு சுவையுள்ள மாம்பழங்கள், பால், மாமிச சூப், பச்சை காய்கறிகள், கீரைகள் - இந்த உணவுகள் சோகையை போக்கும். முருங்கை கீரை, இரும்புசத்து நிறைந்தவை. எனவே வாரம் ஒரு முறை முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

3. பீட்ரூட்டில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இரத்த சிகப்பு அணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், இளவயது யுவதிகளுக்கு பீட்ரூட் சாறு சோகையை குறைக்கும்.

4. சமைத்த வெந்தயக்கீரை லெட்டூஸ் கீரை அனீமியாவை போக்கும்.

5. எல்லா கீரைகளும் இரும்புச்சத்து செறிந்தவை அதுவும் பசலைக் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது.

6. பாதாம் பருப்பில் இரும்பு, வைட்டமின்கள் மட்டும் இல்லாமல், செம்பும் இருக்கிறது. செம்பு ஹேமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம் பருப்புக்களை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, பின் தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து அந்த கூழ் பசையை தினமும் காலையில் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும்.

7. கறுப்பு எள் இரும்புச்சத்து நிறைந்தது. இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும்.

8. தேன் அயச்சத்து நிறைந்தது. சோகைக்கு மருந்து.

9. பூசணிக்காய் இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம் போதல் இவற்றை கண்டிக்கும். எனவே சோகை வராமல் தடுக்கப்படுகிறது.

10. வெங்காயமும் சோகைக்கு மருந்தாகும்.

11. பேரிச்சம்பழம், வெல்லம் இவைகள் சோகையை போக்கும்.

ஆயுர்வேத மூலிகைகள்

1. நெல்லிக்காய் - 'அமிருதம்' எனப்படும் வைட்டமின் சி நிறைந்தது. இதனால் உடல் இரும்புச்சத்தை கிரகிப்பது சுலபமாகிறது. தவிர நெல்லிக்காய் இரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. உலர்ந்த நெல்லிக்காய் சோகைக்கு நல்ல மருந்து ரத்தத்தில் ஹேமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும்.

2. திராட்சை - குளிர்ச்சி, உடல் பலவீனத்தை போக்கும். ரத்தத்தை பெருக்கும்.

3. அஸ்வகந்தா - அமுக்கிராகிழங்கு) - டானிக், நரம்புகளை பலப்படுத்தும். ஆண்மை பெருக்கி, உடல் பலத்தை அதிகரிக்கும்.

4. நிலத்துத்தி - பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் வெள்ளைபடுதல் இவற்றை போக்கும்.

5. சதவாரி - தண்ணீர் விட்டான்) - பசியை தூண்டும். டானிக் உடல் சக்தியை வளர்க்கும். மூளைக்கும் நல்ல டானிக் சத்துக்கள் நிறைந்தது.

6. அசோகா - குருதிப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் சமயங்களில் அதிக உதிரபோக்கு ஏற்பட்டால் அசோகம் அதை நிறுத்தும்.

7. பூனைக்காலி - உதிரப்போக்கை நிறுத்தும். ஆண்மையை பெருக்கும். நரம்பு டானிக்.

8. நீர்முள்ளி - சிறுநீர் பெருக்கி, உடல் சோர்வை போக்கி உடல் ஊட்டத்தை உண்டாக்கும்.

9. முக்கரட்டை - குளிர்ச்சி, சோகைக்கு மருந்து.

முக்கிய எச்சரிக்கை
1. இரும்புச்சத்து, டானிக்காகவோ இல்லை உணவுகளின் மூலம் எடுத்துக் கொள்ளும் போது, கூடவே வைட்டமின் ‘சி’ யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் ‘சி’ இரும்புச்சத்தை கிரகிக்க, சூரணம் செய்ய உதவும்.

2. அதிக அயச்சத்து ஆபத்து. எனவே அதிகமாக இரும்பு டானிக்குகளை உபயோகிக்க வேண்டாம். கல்லீரல் பாதிக்கப்படும். மலச்சிக்கல், வயிற்றுவலி, தலை வலி இவை உண்டாகலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி, தேவையான அளவு இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner