Ads Header

Pages


11 September 2012

எளிய இய‌ற்கை வைத்தியம் - 5

1. ருமல் தணிய தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு எள் உட்கொண்டு வந்தால் குணமாகும்.
*
2. பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட இருமல், ஈளை, சீதக்கடுப்பு, புகையிருமல் ஆகியவை குணமாகும்.

கடுக்காயை வடகம் செய்து உட்கொண்டு வர வாந்தி, மூலம், வீக்கம், வயிற்றுவலி, சூலை, இரத்த சோகை முதலியன நீங்கும்.

பல்லில் ரத்தக் கசிவு உள்ளவர்கள் கடுக்காய், உப்பு, சீரகம் மூன்றையும் அரைத்து தினம் இருவேளை பல் துலக்க சுகம் பெறும்.
*
3. நிம்மதியான உறக்கம் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
*
4. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகு செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
*
5. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.
*
6. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
*
7. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
*
8. பித்தம் நீங்க கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும் பனை வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.
*
9. பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்று போக காலை வெறும் வயிற்றில் கொஞ்சம் வேப்பம்பூவுடன் சிறிய துண்டு கருப்பட்டி வைத்து அரைத்து இரண்டு பெருநெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.
*
10. சாதாரண தலைவலிக்கு, சுக்கை தண்ணீர்விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் நீங்கும். சுரத்தின் போது ஏற்படும் கடுமையான தலைவலிக்கு கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட்டால் குணமாகும்.
*
11. வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி, கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும், உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.
*
12. சாதாரண பல்வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொண்டாலே போதும் வலி அதிகமாக இருந்தால் கடுகை அரைத்துப் பல்வலி இருக்கும் பக்கம் கன்னத்தின்மேல் பொடி செய்து பற்றுப் போட்டால் குணமாகும்.

படிகாரம், லவங்கப்பட்டை, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து சலித்து அந்தத் தூளைக் கொண்டு காலையிலும், இரவிலும் பல் துலக்கி வந்தால் எவ்வகையான பல் வலியும் அகலும்.
*
13. ஈரல், பித்தப்பை, ரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகள், நரம்பு மண்டலம் சரியாக இயங்காமை, ரத்த சோகை மற்றும் சில நோய்களைக் குணப்படுத்த திராட்சை பயன்படுத்தப்படுகிறது.
*
14. ரத்தம் சுத்தமடைய பசும்பாலில் உலர்ந்த அல்லது பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி, கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடைந்து உடல் நலம் பெறும்.
*
15. பித்தம் நீங்க கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும், பனைவெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner