Ads Header

Pages


24 September 2012

சுத்தமான தேனா என்பதை அறிய...

புரை ஊற்ற மோர் இல்லையா?

பாலில் புரை ஊற்றுவதற்கு மோர் அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 கா‌ய்‌ந்த மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந்தப் பால் நன்கு தோய்ந்து தயிர் ஆக மாறி இருக்கும்.

குக்கரில் வெயிட் போடும்போது...

சிலர் குக்கரை மூடியவுடனேயே வெயிட்டைப் போட்டுவிட்டு, வேலை ஆயிற்று என்று நிம்மதியாக நகர்ந்து விடுவார்கள். இது தவறு. நீராவி மூடியின் பைப் வழியாக நன்கு வெளிப்பட்ட பிறகு வெயிட்டைப் போட வேண்டும். இல்லாவிட்டால், பைப்பில் அடைப்பு இருந்தால் அது ஆபத்தில் முடியும். நீராவி வெளிவரும் வேகத்தில் அடைப்பு நீங்கி விடவும் கூடும்

சுத்தமான தேனா என்பதை அறிய...

தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.

வீட்டிலேயே பால்கோவா செய்ய...

சிலருக்கு வீட்டிலேயே பால்கோவா செய்ய ஆசையும் திறமையும் இருக்கும். ஆனால், நேரம் தான் இருக்காது. இவர்கள், தினமும் கொஞ்சம் பாலை சுண்டக்காய்ச்சி, `குழம்புப்பால்' பதத்துக்கு ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வரலாம். என்றைக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, அவ்வளவு நிமிடம் மட்டும் பாலைக் காய்ச்சிக் கொண்டே வந்தால், சில நாட்களில் சிரமம் தெரியாமல் பால்கோவா ரெடி!

அப்பளம் பொரிக்கும்போது...

எ‌ரிவாயு அடுப்பில் அப்பளம் பொரிக்கும்போது, கடைசி நிமிடம் வரை அடுப்பு எரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அடுப்பை அணைத்த பிறகு அந்த எண்ணெய்ச் சூட்டிலேயே ஐந்தாறு அப்பளங்கள் பொரித்து எடுத்துவிடலாம்.

சப்பாத்தி சுடும்போது...

சப்பாத்தி இட்டு விட்டு, அதன் மீது லேசாய் எண்ணெய் தடவி முக்கோணமாக மடித்து பிறகு மீண்டும் இட்டு, பிறகு சுட்டால், சப்பாத்தி தனித்தனியாக இதழ் பிரிவது போல் பிரிந்து கொண்டு வரும்.

அப்பம் மிருதுவாக இருக்க...

அப்பத்துக்கு மாவு கரைக்கும் போது சிறிதளவு கோதுமை மாவைச் சேர்த்துக் கொண்டால், அப்பம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

1 comments:

Easy (EZ) Editorial Calendar said...

அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல்.......உங்கள் தகவலுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner