Ads Header

Pages


28 September 2012

கண்கள் ''ப்ளிச்'' ஆக... ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்...

ரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்.....

கண்கள் ''ப்ளிச்'' ஆக...

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.
*
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
***
ஜொலி ஜொலிக்க...
தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.
*
உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா...
*
இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷ’னில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.
*
இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.
***
வடுக்கள் நீங்க...
முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்?
*
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.
*
இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
***
கருமையை விரட்டியடிக்க....
சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...
*
1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.
***
ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை...

2 comments:

அம்பாளடியாள் said...

பயனுள்ள அருமையான பகிர்வு சகோதரரே இவைகள்
அனைவரையும் சென்றடைய என் வாழ்த்துக்கள் .மிக்க
நன்றி பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

தமிழ் மணத்தில் இந்த ஆக்கத்தினை பதிவேற்றத் தவறி விட்டேர்களா?..

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner